15 வருஷம் ஆனாலும் பரவாயில்லை.. என் குழந்தைங்க சாகணும்னு சொல்றான்.. கொந்தளித்த சின்மயி

ஹைதராபாத்: பாடகி சின்மயி, எக்ஸ் ஸ்பேஸ் கலந்துரையாடலில் தன்னை அவதூறாகப் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஹைதராபாத் நகர காவல் ஆணையர் வி.சி. சஜ்ஜனாரிடம் முறையிட்டுள்ளார். யாஷஸ்வினி பி என்ற நெட்டிசன், சின்மயியை தனிப்பட்ட முறையில் தாக்கி, ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்திய ஸ்பேஸ் உரையாடலின் பதிவை வெளியிட்டபோது இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

யாஷஸ்வினி பி தனது பதிவில், "அவர்கள் என்னைப் பற்றியும், சின்மயியைப் பற்றியும் மோசமான விஷயங்களைப் பேசினர். துரதிர்ஷ்டவசமாக, நான் அதை ரெக்கார்டு , ஆனால் சின்மயி இந்த தரக்குறைவான நபர்கள் மீது புகார் அளிப்பார் என்று நம்புகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

Singer Chinmayi seeks action against Online Abuser over a recent X Space argument

இதற்குப் பதிலளித்த சின்மயி, காவல் ஆணையரிடம், "மதிப்பிற்குரிய சஜ்ஜனார் சார், தயவுசெய்து இதைக் கவனத்தில் கொள்ளுங்கள். இந்த தினசரி அவதூறுகளால் நான் சோர்வடைந்துவிட்டேன். தெலுங்கானாவில் பெண்களுக்கு இதைவிடச் சிறந்த நிலை தேவை. ஒரு கருத்து பிடிக்கவில்லை என்றால், அதை புறக்கணித்துவிட்டுச் செல்லலாம். புகார் அளிக்க நான் தயாராக இருக்கிறேன், இந்த வழக்கு 15 ஆண்டுகள் எடுத்தாலும், சட்டம் தன் கடமையைச் செய்யட்டும். இந்த நபர் என் குழந்தைகள் இறக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். தயவுசெய்து உதவுங்கள்" என்று வேண்டுகோள் விடுத்தார்.

சின்மயி புகாரைத் தொடர்ந்து, ஆணையர் சஜ்ஜனார், ஹைதராபாத் சைபர் கிரைம் போலீஸாருக்கு இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

சின்மயி கணவர் ராகுல் ரவீந்தரன் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள தி கேர்ள்ஃப்ரெண்ட் திரைப்படம் இந்த வாரம் நவம்பர் 7ம் தேதி திரைக்கு வருகிறது. சமீபத்தில், அந்த படத்தை ப்ரோமொட் செய்யும் பேட்டியில், என் மனைவி தாலி அணியவில்லை என்றாலும் நான் ஒன்றும் சொல்லமாட்டேன், அது அவருடைய விருப்பம் என பேசியிருந்தார்.

அவருக்கு எதிராக டோலிவுட் ரசிகர்கள் சிலர், கருத்துக்களை பதிவிட ஆரம்பித்த நிலையில், ட்விட்டர் ஸ்பேஸில் சின்மயி பேசும் போது, அவரை பற்றியும் அவரது குடும்பத்தை பற்றியும் நெட்டிசன் ஒருவர் ஆபாசமாகவும் மோசமாகவும் பேசியது தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X