Chinmayi: முதல்முறையாக தன்னுடைய குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிட்ட சின்மயி.. க்யூட்!

சென்னை: தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருபவர் பாடகி சின்மயி. இவருக்கும் நடிகர் ராகுல் ரவீந்திரனுக்கும் கடந்த 2014ம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது.

கடந்த ஆண்டில் இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தநிலையில், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதாக விமர்சனங்கள் எழுந்தன.

இவற்றையெல்லாம் எதிர்கொள்ளும் வகையில் தன்னுடைய கர்ப்பகால புகைப்படங்களை சின்மயி வெளியிட்டிருந்தார்.

Singer Chinmayi shares her kids photos in Instagram

குழந்தைகள் புகைப்படங்களை வெளியிட்ட சின்மயி: கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல்மூலம் ரசிகர்களை கட்டிப் போட்டவர் பாடகி சின்மயி. முதல் பாடலே இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையில் பாடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இதற்கு முக்கிய காரணம் முன்னதாக சன் டிவியின் சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று இவர் டைட்டிலை வெற்றி பெற்றதுதான். இந்த நிகழ்ச்சியை பார்த்துதான் ஏஆர் ரஹ்மான் தனது படத்தில் பாடும் வாய்ப்பை சின்மயிக்கு கொடுத்திருந்தார்.

தொடர்ந்து ஏராளமான பாடல்களை பாடி வருகிறார் சின்மயி. முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் இவர் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். பின்னணி பாடகியாக மட்டுமின்றி டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் இவர் சிறப்பாக தன்னை வெளிப்படுத்தி வருகிறார். சில்லுன்னு ஒரு காதல் படத்தில்தான் இவரது டப்பிங் பயணம் தொடங்கியது. தொடர்ந்து சமந்தா, த்ரிஷா, காஜல் அகர்வால் மற்றும் தமன்னா போன்றவர்களுக்காக தமிழில் வாய்ஸ் கொடுத்துள்ளார் சின்மயி.

நடிகர் ராகுல் ரவீந்திரனை காதலித்து கடந்த 2014ம் ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டார். தொடர்ந்து 8 ஆண்டுகளாக குழந்தைகள் பெற்றுக் கொள்ளாமல் இருந்த இவர்களுக்கு கடந்த ஆண்டில் ஆண் மற்றும் பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. முன்னதாக எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல், குழந்தை பிறப்பை அறிவித்ததால், இவர் வாடகைத்தாய்மூலம் குழந்தை பெற்றதாக விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு தன்னுடைய கர்ப்பகால புகைப்படங்களை வெளியிட்டு பதிலடி கொடுத்திருந்தார் சின்மயி.

Singer Chinmayi shares her kids photos in Instagram

இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுகளாக தன்னுடைய குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிடாமல் இருந்த சின்மயி தற்போது அவர்களின் க்யூட் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அவர்களின் முதல் பிறந்தநாளையொட்டி இந்த புகைப்படங்களை சின்மயி வெளியிட்டுள்ள நிலையில், படங்களை பார்த்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் க்யூட் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதனிடையே பாடகியான சின்மயி, இசையமைப்பாளராகவும் மாறி லாலி என்ற பாடலை கம்போஸ் செய்து தன்னுடைய ஸ்டூடியோவில் தானே அந்தப் பாடலை பாடியும் உள்ளார். இதற்கான அழகான வீடியோவையும் எடுத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் தன்னுடைய குழந்தைகளை கொஞ்சுவது போலவும் நாய்க்குட்டிகளுடன் அழகான தருணங்களை செலவிடுவது போலவும் காணப்படுகிறது. மேலும் பாடலின் இறுதியில் தன்னுடைய குழந்தையின் கையால் இசையமைப்பது போலவும் காட்டப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X