Jani Master: மைனர் பெண்ணை கெடுத்திருக்கான்.. ஜானி மாஸ்டரை பொளந்துக்கட்டிய பாடகி சின்மயி!

சென்னை: விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட், வாரிசு உள்ளிட்ட படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றிய பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜானி என்கிற ஷேக் ஜானி பாஷா தன்னை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார் என இளம் நடனக் கலைஞர் அளித்த புகார் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மலையாள திரையுலகை அடுத்து தற்போது தெலுங்கிலும் பாலியல் தொல்லைகள் அரங்கேறி வருவதை வெளிச்சம் போட்டுக் காட்ட சில இளம் பெண்கள் முன் வந்துள்ளனர். நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது 21 வயது இளம் பெண் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்துள்ளார்.

chinmayi jani master sexual assault vijay

இந்நிலையில், அந்த பெண் 16 வயது மைனர் பெண்ணாக இருக்கும் போதே ஜானி மாஸ்டர் அவருக்கு பாலியல் தொல்லைகளை கொடுத்து பலாத்காரம் செய்துள்ளார் என சின்மயி ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.

புட்ட பொம்மா முதல் ரஞ்சிதமே: டோலிவுட் மற்றும் கோலிவுட்டில் முன்னணி நடன இயக்குநராக வலம் வரும் ஜானி மாஸ்டர் கடந்த சில ஆண்டுகளாக ஏகப்பட்ட ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். அல்லு அர்ஜுனின் அலா வைகுந்தபுரமுலோ படத்தில் அவர் உருவாக்கிய புட்ட பொம்மா பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், விஜய்யின் பீஸ்ட், வாரிசு படங்களுக்கு அவரையே கொரியோகிராஃபராக ஒப்பந்தம் செய்தார் விஜய். திருச்சிற்றம்பலம் படத்துக்காக தேசிய விருதும் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மைனர் பெண் பலாத்காரம்: ஜானி மாஸ்டர் டீமில் பெண் நடனக் கலைஞராக இருந்த பாதிக்கப்பட்ட பெண் தற்போது தனியாக நடன இயக்குநராகவும் செயல்பட்டு வருகிறார். 21 வயதான அவர் துணிச்சலுடன் ஜானி மாஸ்டர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். ஹைதராபாத், சென்னை, மும்பை என ஷூட்டிங் சென்ற இடங்களில் எல்லாம் ஜானி மாஸ்டர் தன்னை பலாத்காரம் செய்தார் என புகார் அளித்துள்ளார். ராய்துர்காம் காவல் நிலையத்தில் நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சின்மயி ட்வீட்: தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் விவகாரங்களுக்கு எதிராக போராடி வரும் பாடகி சின்மயி 16 வயதாக இருக்கும் போதே அந்த இளம் பெண்ணுக்கு ஜானி மாஸ்டர் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறான். பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டுள்ள அந்த பெண்ணுக்கு இந்த விவகாரத்தில் போராட வலிமை கிடைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன் என இளம் பெண்ணுக்கு ஆதரவாக சின்மயி ட்வீட் போட்டுள்ளார். புட்ட பொம்மா பாடல் உருவாக்கும் போது கூட அந்த பெண்ணை ஜானி மாஸ்டர் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மதம் மாறினால் கட்டிக்கிறேன்: 42 வயதாகும் ஜானி மாஸ்டர் ஏற்கனவே ஆயிஷா என்பவரை திருமணம் செய்து 2 குழந்தைகளுக்கு அப்பாவாக உள்ளார். ஆனாலும், இந்த இளம் பெண்ணை காதலிப்பது போல நடித்து உடலுறவு வைத்துக் கொண்டு மதம் மாறினால் உன்னை கட்டிக்கிறேன் என வலுக்கட்டாயப்படுத்தினார் என்றும் அடுத்தடுத்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பவன் கல்யாண் கட்சி நடவடிக்கை: ஜானி மாஸ்டர் மீது இளம் பெண் பலாத்கார புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், பவன் கல்யாணின் ஜனசேன கட்சியில் உறுப்பினராக இருக்கும் ஜானி மாஸ்டரை கட்சி பணிகளில் இருந்து விலகி இருக்கும்படி அந்த கட்சியின் தலைமை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X