பெண்கள் யாரும் கன்னித்தன்மையோடு இல்லை..இணையவாசியின் மோசமான கேள்வி.. விளாசிய சின்மயி!

சென்னை: தென்னிந்திய முன்னணி பின்னணிப் பாடகி சின்மயி, சமுதாயத்தில் பெண்கள் எவ்வாறு தைரியமாக இருக்க வேண்டும் என்பது குறித்தும், பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அவ்வப்போது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் எக்ஸ் தள பக்கத்தில், பெண்கள் குறித்து தவறாக பதிவு ஒன்றை போட்ட இணையவாசிக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

அந்த இணையவாசி, இந்தியாவில் திருமணம் செய்ய கன்னிப் பெண்களே இல்லை என்று புலம்பி பதிவிட்டு இருந்தார். இணையவாசியின் இந்த பதிவால் கடுப்பான சின்மயி, பிளிங்க்இட் CEO தனது சமூக வலைதள பக்கத்தில், 1.2 லட்சம் காண்டம் ஒரே இரவில் டெலிவரி செய்யப்பட்டது என பதிவிட்டுள்ளார். ஒரே இரவில் அந்த தளத்தில் மட்டும் இவ்வளவு விற்பனை செய்யப்பட்டது என்றால், இ காமர்ஸ் தளத்தில் எத்தனை லட்சம் விற்பனை நடந்து இருக்கும். இந்த காலத்து ஆண்கள் கன்னித்தன்மை குறையாத பெண்களை கண்டுபிடித்து திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று நினைப்பதற்கு வாழ்த்துக்கள்.

chinmayi twitter

சின்மயி கோமாளி: அப்படி நினைக்கும் ஆண்கள் திருமணத்திற்கு முன்பு, ஒரு பெண்ணுடன் பாலியல் ரீதியாக உறவு வைத்துக் கொள்ளக்கூடாது, ஆண்கள் ஆடுகள், நாய்கள் மற்றும் ஊர்வனவற்றுடன் உடலுறவு கொள்ளுங்கள் என பதிவிட்டு இருந்தார். இவரின் இந்த பதிவு இணையத்தில் டிரெண்டானதைத் தொடர்ந்து, சின்மயின் காட்டமான பதிவினை பார்த்த இணையவாசி ஒருவர், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆண்கள் மட்டும் இல்லை பெண்கள் அதை செய்யக்கூடாது என பதிவிட்டு, சின்மயை கோமாளி என குறிப்பிட்டு இருந்தார்.

chinmayi twitter

ஆண்களின் மனநோய் :அந்த நபருக்கு ரிப்ளை செய்த சின்மயி, பெண்கள் கன்னித்தன்மை மீது ஆர்வம் கொண்டவர்கள் இல்லை, ஆண்கள் அந்த விஷயத்தில் சுறுசுறுப்பாக இருந்ததாக பெண்கள் நினைக்கிறார்கள். நீங்கள் அனைவரும் பாதுகாப்பான உறவு கொண்டீர்களா என்று கேட்க கூட உங்களுக்கு தைரியம் இல்லை, பாலியல் விருப்பம் இல்லாத சகோதரர்கள் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்ட உடன் நிரந்தரமாக அவர்களை மாசு படுத்தி விட்டதாக நினைக்கிறீர்கள். இது ஆண்களுக்கு இருக்கும் ஒரு வித நோய் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு பலவிதமான கண்டனங்கள் குவிந்து வந்தாலும் ஒரு சில பெண்கள் சின்மயிக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X