வௌங்கிடும் கலாச்சாரம்.. டிரெஸ பாத்தாலே அடிக்கனும் போல இருக்கா.. ஜீ தமிழின் சீரியலை விளாசிய சின்மயி!

Recommended Video

Singer Chinmayi slams Kamal| கமலை விளாசிய பிரபல பாடகி!

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ரெட்டை ரோஜா சீரியலை பிரபல பாடகியான சின்மயி வெளுத்து வாங்கியிருக்கிறார்.

பாடகியான சின்மயி விருது விழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் பாடலாசிரியர் வைரமுத்து மீது மீடூ மூலம் பாலியல் குற்றச்சாட்டை கூறியதில் இருந்து சின்மயை பொது நிகழ்ச்சிகளில் அதிகமாக காணமுடிவதில்லை.

தொடர்ந்து பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் தாக்குதல்கள் குறித்து குரல் கொடுத்து வருகிறார் சின்மயி. அண்மையில் கமலின் புதிய அலுவலக்ததில் மறைந்த இயக்குநர் பாலச்சந்தருக்கு சிலை திறக்கப்பட்டது.

சின்மயி கண்டனம்

சின்மயி கண்டனம்

இந்த விழாவில் வைரமுத்து விருந்தினராக பங்கேற்றார். இதற்கு கண்டனம் தெரிவித்த சின்மயி, பாதிக்கப்பட்ட என்னை தடை செய்தார்கள், குற்றவாளியை விருந்தினராக அழைத்து மரியாதை செய்கிறார்கள் என கடுமையாக விளாசியிருந்தார்.

சீரியல் காட்சி

சீரியல் காட்சி

இதனால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் தனியார் தொலைக்காட்சியின் சீரியல் ஒன்றை வெளுத்து வாங்கியிருக்கிறார் சின்மயி. இது தொடர்பாக டிவிட்டியிருக்கும் சின்மயி அந்த சீரியலின் குறிப்பிட்ட காட்சியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார்.

அறையனும் போல இருக்கு

அதில் அரைகுறையாக உடையணிந்திருக்கும் பெண்களை பார்த்து, நாயகன் நீங்கள் எல்லாம் பெண்கள்தானா என்று கேட்டு, தலைவாருவதில்லை, வளையல் போடுவதில்லை, பொட்டு வைப்பதில்லை, டிரெஸா போடுறீங்க.. பார்த்தாலே அறையனும் போல இருக்கு என்று விளாசி தள்ளுகிறார்.

வௌங்கிடும் கலாச்சாரம்

இதைத்தான் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார் சின்மயி. அதாவது, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரெட்டை ரோஜா சீரியலில் ஆண் நடிகர் ஒருவர், பெண்கள் அணிந்திருக்கும் ஆடையயை பார்த்தே அடிக்க தோன்றுவதாக பேசியிருக்கிறார். மேலும் பெண்கள் எப்டி இருக்க வேண்டும் என்றும் அவர் பேசியிருப்பதாக கூறியுள்ள சின்மயி, வௌங்கிடும் கலாச்சாரம் என்றும் பதிவிட்டிருக்கிறார்.

பணம் பத்தும் செய்கிறது

சின்மயின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் இயக்குநர் சொல்வதை செய்கிறார்கள்.. பணம் பத்தும் செய்கிறது என பதிவிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X