ஆண் துணை இல்லாமல் வாழ முடியாதா? கல்யாணம் பண்ணுவதே அதற்கு தான்.. சின்மயி பளீச்!

சென்னை: சமந்தா-நாகசைத்தன்யா, தனுஷ்-ஐஸ்வர்யா,ஜெயம் ரவி -ஆர்த்தி, ஜிவி பிரகாஷ் - ஷைந்தவி, ஏஆர் ரஹ்மான் - சைரா பானு என அடுத்தடுத்து திரைப்பிரபலங்கள் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பல ஆண்டுகளாக மனம் ஒத்த தம்பதிகளாக வாழ்ந்த இவர்களின் விவாகரத்து முடிவு பலரை சங்கடத்தில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், திருமணம் குறித்து சின்மயி பேசிய பழைய பேட்டி ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

சன் தொலைக்காட்சியில் சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியில் தான் சீனிவாசன் சார் என்னை பார்த்து, ஏ.ஆர்.ரகுமான் சார்கிட்ட அழைத்துக்கொண்டு போனார். அப்போது தான் எனக்கு கண்ணத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் ஒரு தெய்வம் தந்த பூவே பாடலை பாட, ரகுமான் சார், வாய்ப்பு கொடுத்தாரு. அதுக்கு முன்னாடி எனக்கு மணிரத்தினம் சார் யார் என்றே எனக்கு தெரியாது. ஆனால், ஏ ஆர்.ரகுமான் இசையில் பாடவேண்டும் என்கிற கனவு எனக்கு இருந்தது.

chinmayi throwback interview

பாடகி சின்மயி பேட்டி: இதைத்தொடர்ந்து, செய்தியாளர் ஒரு பெண்ணுக்கான தைரியம், தன் நம்பிக்கை, ஒரு ஆண்னின் காதலின் மூலம் முழுமையாக கிடைக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சின்மயி, ஒரு பெண்ணுக்கு வாழ்க்கை துணை மட்டும் சரியாகவே அமைந்து விட்டால், அந்த வாழ்க்கை ரொம்ப அமைதியாக இருக்கும். ஒரு பெண்ணை பார்த்து பொறாமை படாமல், அந்த பெண் நம்மளோட அதிகமாக சம்பாதிக்கிறாள் என்கிற எந்தவிதமான ஈகோவும் இல்லாமல், ஒரு ஆண் அமைந்துவிட்டாள், அந்த பெண்ணின் வாழ்க்கை ரொம்ப அழகாவும், அமைதியாகவும் இருக்கும். என்னோட வாழ்க்கையில் எனக்கு ரொம்ப சப்போட்டா இருந்தது என்னுடைய கணவர் தான், ஆனால், அதற்கு முன்பாகவே நான் தைரியமானவளாகத்தான் இருந்து இருக்கிறேன். அந்த தைரியத்தை வெளியில் கொண்டு வந்தது என் கணவர் தான்.

ஆண் துணை இல்லாமல்: ஆனால், பல பெண்களுக்கு அந்த அமைதி இல்லை, ஒரு பெண்ணுக்கு திருமணமாகிவிட்டது என்பதற்காக, அந்த பெண்ணின் கனவு, ஆசை எல்லாத்தையும் விட்டு கொடுத்துத்தான் வாழ்ந்து வருகிறார்கள். ஒரு குடும்பம் அமைதியாக இருக்க வேண்டும், அதற்காக நான் இதையெல்லாம் செய்கிறேன் என்று தன்னுடைய ஆசை புதைந்துக் கொண்டு இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை ஏன் பெண் வாழ வேண்டும் என்பது தான் என்னுடைய கேள்வி. ஒரு பெண்ணால், ஆண் துணை இல்லாமல் இருக்க முடியாது என்கிற நிலையை உருவாக்கி வைத்து இருக்கிறார்கள். அதற்காக கொண்டு வரப்பட்டது தான் திருமணம். திருமணம் செய்து கொண்ட எத்தனை தம்பதிகள் புரிதல், காதலோடு வாழ்கிறார்கள். பாதி பேர் காமத்திற்கான திருமணம் செய்து கொள்கிறார்கள், சிலர் ஏதோ கல்யாணம் செய்து வைத்தார்கள், குழந்தை பெற்றுக்கொண்டோம் என்பதற்காக தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்றார்.

நான் பக்கா தமிழ் பெண்ணு: தொடர்ந்து பேசிய சின்மயி,பலர் என்னை தெலுங்கு நாயுடு என்றெல்லாம் சொல்லிக் கொண்டு இருக்கிறார். என்னுடைய சொந்த ஊர் ராமநாதபுரம், என் கணவர் தஞ்சாவூர் இளையான் குடி, நான் பக்கா தமிழ் பொண்ணு, அதனால் தான் எனக்கு திமிர் அதிகமாக இருக்கிறது என்று பாடகி அந்த பேட்டியில் கூறியுள்ளார.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X