என் தாய்மை தவறா? தரக்குறைவாக விமர்சித்த இணையவாசியை மோசமாக திட்டிய சின்மயி!

சென்னை : தாய்மை குறித்து தவறான கருத்து தெரிவித்த ஒரு இணையவாசியை கடுமையாக திட்டி உள்ளார் பாடகி சின்மயி.

சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சின்மயி அவ்வப்போது, பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை பகிர்ந்து அடிக்கடி சர்சையில் சிக்கிக்கொள்வார்.

2014ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான நடிகர் ராகுல் ரவீந்தரனை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் குழந்தையே இல்லாமல் இருந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் இரட்டை குழந்தை பிறந்தது.

கர்ப்பகால போட்டோ

கர்ப்பகால போட்டோ

நயன்தாரா வாடகைத்தாய் மூலம் தாயானதால், பலரும் உங்களுக்கும் வாடகைத்தாய் முறையில் தான் குழந்தை பிறந்ததா என கேள்வி கேட்டு வந்தனர். இதனால், கர்ப்பமாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்து கர்ப்பமாக இருந்த 32 வாரங்களில் நான் எடுத்த ஒரே செல்ஃபி என்று பதிவிட்டு, சந்தேகத்துடன் கேள்வி கேட்ட ரசிகர்களுக்கு போட்டோ மூலம் பதிலளித்தார்.

மோசமான கருத்து

மோசமான கருத்து

சின்மயி அப்லோடு செய்திருந்த போட்டோவை பார்த்து பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில்,ஒரு ஏடாகூட இணையவாசி சின்மயி குறித்தும் அவரது குழந்தை குறித்தும் மோசமான கருத்தை இணையத்தில் தெரிவித்து இருந்தார். இந்த கமெண்டை பார்த்து டென்ஷனான சின்மயி அந்த நபரை மோசமான வார்த்தையால் திட்டியுள்ளார்.

ஒரு சில பொறுக்கிகள்

ஒரு சில பொறுக்கிகள்

அதில், ஒரு சில பொறுக்கிகள் மாறவே இல்லை, அவர்கள் இன்னும் பொறுக்கிகளாகவே இருக்கிறார்கள். சில போட்டோக்களை ஷேர் செய்ய காரணமே விழிப்புணர்வுக்காகத்தான். ஆனால், அதையே தவறா புரிந்து கொண்டு இப்படி தவறான விமர்சனம் கொடுத்துள்ளார். இந்த போட்டோவை ஷேர் செய்த போது நான் மிகவும் மோசமான மனநிலையில் இருந்தேன்.

செருப்படி பதில்

செருப்படி பதில்

குழந்தை பிறக்குமா? பிறக்காதா? குழந்தைக்கு என்னாகும் என்ற மனநிலையில் நான் இருந்தேன். ஆனால், இந்த போட்டோவை பார்த்து விட்டு தவறான கருத்துக்களை பதிவு செய்கிறீர்கள். என்னையும் என் குழந்தையையும் இப்படி விமர்சனம் செய்யலாமா என்றும், நீங்கள் எல்லாம் திருந்தவே மாட்டீங்க நம்ம ஊர் பொறுக்கிங்க பொறுக்கிங்க தான். ரத்தத்துலயே ஊறுனது, வளர்ப்பும் அப்படி என்று மிகவும் கடுமையான வார்த்தைகளால் அந்த இணையவாசியை திட்டி உள்ளார். பலர் சரியான செருப்படி பதில் என கூறிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X