கழுதைப்புலியோட மோசமான மிருகங்கள்.. நிதி அகர்வாலுக்கு நேர்ந்த கொடுமை.. சின்மயி காட்டம்!
சென்னை: ஹைதராபாத்தில் நேற்று 'ராஜாசாப்' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகை நிதி அகர்வாலை ரசிகர்களிடம் சிக்கி திக்குமுக்காடிப்போனார். ரசிகன் என்ற போர்வையில் நடிகையிடம் பலர் அத்துமீறிய வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ள நிலையில், பின்னணி பாடகி சின்மயி இதை கடுமையாக கண்டித்துள்ளார்.
திகில் மற்றும் நகைச்சுவைத் திரைப்படமான "தி ராஜா சாப்" படத்தை இயக்கிய மாருதி இயக்கி உள்ளார். இப்படத்தில், சஞ்சய் தத், நிதி அகர்வால், ரித்தி குமார், மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.மக்கள் மீடியா ஃபேக்டரி தயாரிப்பில், டி.ஜி. விஷ்வா பிரசாத் தயாரிக்கும் "தி ராஜாசாப்" படம் பெரிய பட்ஜெட்டில் பான் இந்திய திரைப்படமாக தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. தமன் இப்படத்தின் பாடல்கள் இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.

நிதி அகர்வால்: அந்த படத்தில் இருந்து 'சஹானா சஹானா' பாடல் வெளியீட்டு விழா நேற்று ஹைதராபாத்தில் தனியார் மாலில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை நிதி அகர்வால் கலந்து கொண்டு விட்டு சென்ற போது,ரசிகர்கள் மொத்தமாக ஒன்று கூடவிட,நிதி அகர்வால் திக்குமுக்காடி போனார். கூட்டத்தை பயன்படுத்திக்கொண்ட சிலர் நிதி அகர்வாலை தொடக்கூடாத இடங்களில் தொட்டு அத்துமீறினார்கள். இதையடுத்து, நிதி அகர்வாலின் பாதுகாவலர்கள், கூட்டத்தில் இருந்து நிதி அகர்வாலை படாதபாடுபட்டு மீட்டு, காரில் ஏற்றி அனுப்பினார்கள். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பலரையும் கோவமடையச் செய்துள்ளது.
மோசமான ஆண்கள்: இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், பின்னணி பாடகி சின்மயி, தனது எக்ஸ் தளத்தில் இதை கடுமையாக கண்டித்து பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில், கழுதைப்புலிகளை விட மோசமாக நடந்துகொள்ளும் ஒரு கும்பல் ஆண்கள். உண்மையில், கழுதைப்புலிகளை சொல்லி ஏன் அவமானப்படுத்த வேண்டும்? ஒரே மனப்பான்மை கொண்ட ஆண்களை ஒரு கும்பலாகச் சேர்த்தால், அவர்கள் ஒரு பெண்ணை இப்படித்தான் துன்புறுத்துவார்கள். ஏதாவது ஒரு கடவுள் இவர்களையெல்லாம் அழைத்துச் சென்று வேறு ஒரு கிரகத்தில் ஏன் விடக்கூடாது? என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











