வாவ்.. ஜஸ்ட் வாவ்.. திலீப்புக்கு சாதகமாக வந்த தீர்ப்பு.. சின்மயி சொன்னதை பாருங்க!

சென்னை: நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் நடிகர் திலீப் குமார் குற்றவாளி இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மலையாளம், தெலுங்கு, தமிழ் திரையுலகில் நடித்துக் கொண்டிருந்த பிரபல நடிகையை காரில் கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் கேரளாவை மட்டுமில்லாமல் நாட்டையே உலுக்கியது. கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் நடந்து வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வந்து இருக்கும் நிலையில் பாடகி சின்மயி ஒரு பதிவினை போட்டுள்ளார்.

2017ம் ஆண்டு பிப்ரவரி 17ந் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. இது நடந்த ஒரு சில நாட்களிலேயே நடிகையின் முன்னாள் கார் டிரைவரான சுனில்குமார் என்பவர் உள்பட சிலரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பலாத்காரத்திற்கு சதித்திட்டம் தீட்டியது பிரபல மலையாள முன்னணி நடிகர் திலீப் என விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, பலாத்கார சம்பவம் நடந்து 5 மாதங்களுக்கு பின் ஜூலை 10ம் தேதி நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் பத்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட திலீப், பலமுறை ஜாமீன் கேட்டு விண்ணப்பித்தும், அவருக்கு ஜாமீன் கிடைக்காததால், 85 நாள் சிறைவாசத்திற்கு பின்னர் திலீப் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Dileep Kerala court
Photo Credit:

திலீப் நிரபராதி: இந்த வழக்கு 8 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த இந்த வழக்கு விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து இன்று எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. அதில், நடிகர் திலீப் மீதான குற்றத்தை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை எனக்கூறி திலீப்பை விடுதலை செய்தது எர்ணாகுளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், பிரதான குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஆறு பேர் பாலியல் வன்கொடுமை, குற்றவியல் சதி, கடத்தல் மற்றும் பிற குற்றங்களில் குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். அவர்களுக்கான தண்டனை விவரத்தை டிசம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சின்மயி ட்வீட்: இந்த வழக்கில் இருந்து நடிகர் திலீப் விடுதலையாகி இருக்கும் நிலையில், பாடகி சின்மயி தீர்ப்பு வருவதற்கு முன்பே ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில், இன்றைய தீர்ப்பு எப்படி இருந்தாலும், நான் பாதிக்கப்பட்டவரின் பக்கம் தான் நிற்பேன். பெண்ணே, நீ ஒரு ஹீரோவாக இருந்திருக்கிறாய், என்றும் நீ அப்படித்தான் இருப்பாய். உன் பக்கத்தில் நிற்பது போல் நடித்து, நீதிமன்றத்தில் வாக்குமூலங்களை மாற்றிய அனைவரும் அதற்கான தகுதியான தண்டனை கிடைக்கும் என நான் நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார். தீர்ப்பு வெளியான பின், Wow. Just. Wow என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X