ஜாமீனில் வந்த ஜானி மாஸ்டர்.. அதிகாரம், செல்வாக்கு, மௌனம்.. யார் வெல்வார்கள்? சின்மயி கேள்வி!
சென்னை: பிரபல நடன இயக்குநராக ஜானி மாஸ்டர் பாலியல் வழக்கில் சிக்கி சிறை சென்று, தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ராம்சரணின் பெட்டி திரைப்படத்தில் நடன இயக்குநராக பணியாற்றி இருக்கும் ஜானி மாஸ்டர், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை பதிவிட்டு இருந்தார். இது இணையத்தில் பேசுபொருளான நிலையில், பாடகி சின்மயி தனது எக்ஸ் தளபக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டோலிவுட் மற்றும் கோலிவுட்டில் முன்னணி நடன இயக்குநராக வலம் வருபவர் ஜானி மாஸ்டர். இவர் அல்லு அர்ஜுனின் அலா வைகுந்தபுரமுலோ படத்தில் உருவாக்கிய புட்ட பொம்மா பாடல் மிகப்பெரிய ஹிட்டடித்தது. அதைத்தொடர்ந்து, விஜய்யின் பீஸ்ட், வாரிசு படங்களுக்கு அவரையே கொரியோகிராஃபராக இருந்தார். தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்துக்காக தேசிய விருதையும் ஜானி மாஸ்டர் வென்றார்.
ஜானி மாஸ்டர்: கடந்த ஆண்டு ஜானி மாஸ்டர் டீமில் பெண் நடனக் கலைஞராக இருந்த பாதிக்கப்பட்ட பெண், தற்போது தனியாக நடன இயக்குநராகவும் செயல்பட்டு வருகிறார். 21 வயதான அவர், ஜானி மாஸ்டர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். அதில், ஹைதராபாத், சென்னை, மும்பை போன்ற இடங்களுக்கு ஷூட்டிங் சென்ற போதெல்லாம், நான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேன் என ராய்துர்காம் காவல் நிலையத்தில் புகார் கூறினார். இந்த புகாரைத் தொடர்ந்து, ஜானி மாஸ்டர் கைது செய்யப்பட்டார்.

மீண்டும் படவாய்ப்பு: ஜாமீனில் வெளியே வந்த ஜானி மாஸ்டர், தற்போது ராம் சரண் நடித்துள்ள பெட்டி படத்தில் நடன இயக்குநராக பணியாற்றி உள்ளார். இப்படத்தில் இருந்து முதல் படம் கடந்த வாரம் வெளியாகி டிரெண்டானது. பலரும் இணையத்தில் ஜானி மாஸ்டரை கொண்டாடி வரும் நிலையில், பாடகி சின்மயி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை போட்டுள்ளார். அதில், ஜானி மாஸ்டரின் வழக்கு சிக்கலானது. இந்த வழக்கின் ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்தது மட்டுமில்லாமல் அந்த .
அந்த சிறுமி இணங்க மறுத்தபோது, அவள் பணிபுரியும் இடத்திலேயே ஜானி மாஸ்டர் மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சின்மயி ட்வீட்: இந்த சம்பவம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் முக்கியமாக சிறுமி 16 வயது மட்டுமே என்பதால், அவளிடம் இருந்து எந்தவித ஒப்புதலும் பெறமுடியாது. சம்மந்தப்பட்டவர் ஒருவர் பெரியவராக இருப்பின், சிறுமியுடன் எந்தவித உறவிலும் ஈடுபடாமல் இருப்பது அந்த பெரியவரின் பொறுப்பு. ஜானி மாஸ்டர் செல்வாக்கும் பணமும் நிறைந்தவர் என்பதால், சிறுமிக்கு நீதிக்கான வாய்ப்பு குறைவாக உள்ளதாக சமூக வலைதளங்களில் பலர் கவலை தெரிவித்து வருகின்றனர்.
துஷ்பிரயோகம் செய்வார்கள்: இதேவேளை, இதைப் பற்றி யாரும் பேச வேண்டாம் என்று எச்சரிக்கை விடுப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜானி மாஸ்டரின் மனைவி தங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வரும் என்று முழு நம்பிக்கை இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை அவருக்கு சாதகமான தீர்ப்பு வந்துவிட்டால், அவர் குற்றமற்றவர் என்று கூறி கைகளை கழுவிக் கொள்வார்கள். அதன்பின் அவருக்கு விருதுகள், பாராட்டுகள் என அனைத்தும் குவியும். பின் அதிகாரத்தையும் செல்வத்தையும் பயன்படுத்தி இன்னும் பல சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்யும் ஆண்கள் உருவாவார்கள் என சின்மயி பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











