twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இசைக்குயில் சித்ராவுக்கு இன்று பிறந்தநாள்... வாழ்த்து மழையில் நனைய வைக்கும் ரசிகர்கள் !

    |

    கொச்சி : தன்னுடைய இனிய குரலின் மூலம் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் பாடகி சின்னக்குயில் சித்ரா.

    கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடல்களை பாடியுள்ள பாடகி சித்ரா பத்மஸ்ரீ உள்ளிட்ட பல கௌரவப் பட்டங்கள் உடன் பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளார்.

    பாடல்களால் நம் அனைவரையும் மயங்க வைத்து வரும் பாடகி சித்ரா ஜூலை 27 ஆம் தேதியான இன்று தனது 57வது பிறந்த நாளை கொண்டாடி வருவதையொட்டி இவரது நண்பர்கள் திரைப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில் இவரின் பாடல்களால் மயங்கிப்போன பலகோடி ரசிகர்களும் இவரை வாழ்த்து மழையில் நனைய வைத்துக் அவரது பிறந்த நாளை கொண்டாடுகின்றனர்.

    அதிகளவு பிபி மாத்திரைகளை உட்கொண்டு நடிகை விஜயலக்ஷ்மி தற்கொலை முயற்சி.. பிரபலங்கள் ரியாக்ஷன்! அதிகளவு பிபி மாத்திரைகளை உட்கொண்டு நடிகை விஜயலக்ஷ்மி தற்கொலை முயற்சி.. பிரபலங்கள் ரியாக்ஷன்!

    சின்னக்குயில் சித்ரா

    சின்னக்குயில் சித்ரா

    தமிழ் சினிமா வரலாற்றில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி தன்னுடைய இனிமையான குரலின் மூலம் பல கோடி மக்களை மயங்க வைத்த பெருமைக்குரிய பாடகர்களில் மிக முக்கியமானவர் பாடகி சின்னக்குயில் சித்ரா. இவர் தமிழ் மலையாளம் உள்ளிட்ட 10 மொழிகளுக்கு மேல் பல ஆயிரம் பாடல்களைப் பாடி இன்றுவரை மிகச் சிறந்த பாடகியாக திரைத்துறையில் திகழ்ந்து வருகிறார்.

    பூஜைக்கேத்த பூவிது

    பூஜைக்கேத்த பூவிது

    பாடகர் கே ஜே ஏசுதாஸ் உடன் பல மேடை கச்சேரிகளில் பாடி வந்த பாடகி சித்ரா முதன்முதலில் பாடகியாக மலையாள திரையுலகில் அறிமுகம் செய்யப்பட்டார். தமிழில் நீதானா அந்த குயில் திரைப்படத்தில் இளையராஜாவின் இசையில் வரும் "பூஜைக்கேத்த பூவிது" பாடலின் மூலம் தனது குரலை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்தார்.

    சின்னக்குயில் பாடும்

    சின்னக்குயில் பாடும்

    1985 ஆம் ஆண்டு வெளியான பூவே பூச்சூடவா திரைப்படத்தில் "சின்னக்குயில் பாடும்" என்ற பாடலை பாடியதன் மூலம் இவரை சின்னக்குயில் சித்ரா என அன்போடு அழைத்து வந்தனர். இவ்வாறு தனது மெல்லிய குரலின் மூலம் அனைவரையும் ரசிக்க வைத்து வந்த சித்ரா சிந்து பைரவி படத்தில் " பாடறியேன் படிப்பறியேன்" பாடலை பாடியதற்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார்.

    பலரையும் மயங்க வைத்து

    பலரையும் மயங்க வைத்து

    தமிழில் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் கொடிகட்டி பறந்த சின்னக்குயில் சித்ரா இளையராஜா, ஏ ஆர் ரகுமான், தேவா, எஸ் ஏ ராஜ்குமார், வித்யாசாகர், யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட பல இசையமைப்பாளருடன் இணைந்து பணியாற்றி இன்றும் தனது குரலின் மூலம் பலரையும் மயங்க வைத்து வருகிறார்.

    துள்ளல் மிகுந்த பாடலை

    துள்ளல் மிகுந்த பாடலை

    இவ்வாறு பல்வேறு மொழிகளில் சிறந்த பாடகியாக விளங்கி வந்த பாடகி சித்ரா மின்சாரக்கனவு திரைப்படத்தில் வரும் "ஊஊ லலல்லா' என்ற துள்ளல் மிகுந்த பாடலை பாடி அனைவரையும் நடனமாட வைத்தது மட்டுமல்லாமல் மற்றுமொரு தேசிய விருதையும் பெற்று பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

    பத்மஸ்ரீ விருது

    பத்மஸ்ரீ விருது

    கிட்டத்தட்ட 6 தேசிய விருதுகளையும், 8 பிலிம்பேர் விருதுகளையும், மேலும் 36க்கும் மேற்பட்ட பல மாநில விருதுகளையும் வென்று மிகச் சிறந்த பாடகியாக விளங்கி வந்த கே.எஸ் சித்ராவுக்கு 2005 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

    மக்களின் நெஞ்சங்களிலும்

    மக்களின் நெஞ்சங்களிலும்

    இவ்வாறு தனது வாழ்நாளில் பல இனிமையான பாடல்களைப் பாடி தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய மக்களின் நெஞ்சங்களிலும் நீங்கா இடம் பிடித்திருக்கும் பாடகி சின்னகுயில் சித்ரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

    பிறந்த நாள்

    பிறந்த நாள்

    ஜூலை 27-ஆம் தேதியான இன்று இவர் தனது 57வது பிறந்த நாளை கொண்டாடி வருவதையொட்டி இவருக்கு நண்பர்கள், திரைப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்கள் கூறி வரும் நிலையில், இவரின் பாடல்களால் மயங்கிப்போன பலகோடி ரசிகர்களும் இவரை சமூக வலைதளங்களின் மூலம் வாழ்த்து மழையில் நனைய வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

    English summary
    Singer Chithra is celebrating her 57th birthday
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X