Drake Pizza: பஞ்சு மிட்டாய் லட்ச ரூபாய்.. பிரபல பாடகர் பாதி கடிச்ச பீட்ஸா.. 4 கோடிக்கு ஏலம் போனதா?

லாஸ் ஏஞ்சல்ஸ்: சர்வதேச ராப் பாடகர் டிரேக் பாதி கடித்து வைத்த பீட்ஸா பல கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்படுவதாக தகவல் ஒன்று தீயாக பரவ அந்த பீட்ஸாவை வாங்க நெட்டிசன்கள் போட்டிப் போட்டது தான் உலகளவில் டிரெண்டாகி வருகிறது.

கனடா நாட்டைச் சேர்ந்த பிரபல ராப் இசை பாடகர் டிரேக்கிற்கு இன்ஸ்டாகிராமில் 148 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், டிரேக்கின் நண்பரான பாடகர் லில் யாச்டி பதிவிட்ட போஸ்ட் தான் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

Singer Drake’s half-eaten pizza is sold for 4 crores? What is the truth!

பஞ்சு மிட்டாய் லட்ச ரூபாய்: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா, எஸ்.பி. பாலசுப்ரமணியம், நக்மா நடித்த காதலன் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இடம்பெற்ற "காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால், சின்ன தகரம் கூட தங்கம் ஆகுமே" பாடலில் பாடலாசிரியர் வைரமுத்து ஒரு இடத்தில் "குண்டு மல்லி 2 ரூபாய் உன் கூந்தல் ஏறி உதிரும் பூ கோடி ரூபாய் என்றும் பஞ்சு மிட்டாய் 5 ரூபாய் நீ பாதி தின்று தந்ததால் லட்ச ரூபாய் என்றும் வரிகளை வடித்திருப்பார்.

இந்நிலையில், தற்போது அந்த வரிகளுக்கு உயிர் கொடுக்கும் விதமாக ஒரு டிரெண்டிங்கான போஸ் உலகையே வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

பாதி கடித்த பீட்ஸா 4 கோடியா: பிரபல ராப் பாடகர் டிரேக்கிற்கு உலகளவில் இசை ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், அவரது நண்பரான பாடகர் லில் யாச்டி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட ஒரு போஸ்ட் சர்வதேச டிரெண்டாகி உள்ளது.

அதில், அவர் ஒரு பாதி கடித்த பீட்ஸாவின் புகைப்படத்தை பதிவிட்டு இந்த பீட்ஸா பாடகர் டிரேக் பாதி கடித்து வைத்தது, இதன் விலை 5 லட்சம் டாலர் என பதிவிட்டுள்ளார். இந்திய மதிப்பின் படி சுமார் 4 கோடி என்கின்றனர்.

Singer Drake’s half-eaten pizza is sold for 4 crores? What is the truth!

வாங்க குவிந்த ரசிகர்கள்: லில் யாச்டியின் பதிவுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் அந்த பீட்ஸாவை அத்தனை கோடி தொகை கொடுத்து வாங்க தயாராக இருப்பதாகவும், அது எங்கே ஏலம் விடப்படுகிறது என்கிற விபரங்களை கேட்டு அறிந்தது தான் உச்சகட்ட ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது.

சும்மா விளையாட்டுக்கு: ஆனால், அப்படியொரு ஏலமே விடப்படவில்லை என்றும் லில் யாச்டி சும்மா விளையாட்டுக்கு பதிவிட்ட பதிவு தான் இந்தளவுக்கு டிரெண்டாகி விட்டது என்கின்றனர்.

இந்த பீட்சாவின் விலையை வைத்து ஏகப்பட்ட ட்ரோல்களும் மீம்களும் சோஷியல் மீடியாவை நிரப்பி உள்ளன. ஒரு சிலர், டிரேக் கடித்த பீட்ஸாவை சாப்பிட்டால் மரணம் இல்லாமல் வாழலாம் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

பாடகியுடன் டேட்டிங்: சர்வதேச ராப் பாடகரான டிரேக் பாடகி லில்லாபி உடன் டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருவரும் அடிக்கடி ஒன்றாக வெளியே சுற்றும் போட்டோக்களும் வீடியோக்களும் டிரெண்டாகி வருகின்றன.

இந்நிலையில், டிரேக்கின் பீட்ஸா டிரெண்டான நிலையில், அந்த பாதி பீட்ஸாவை அவர் காதலி லில்லாபிக்கே பரிசாக கொடுத்துடுங்க என்றும் ட்ரோல் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X