Kenisha பாடகி டூ ஹீலிங் தெரபிஸ்ட் .. யார் இந்த பாடகி கெனீஷா பிரான்சிஸ்!
சென்னை: பாடகி, டான்சர், ஹீலிங் தெரபிஸ்ட் என பல திறமைகளை கொண்டவர் தான் கெனீஷா பிரான்சிஸ். கென்யாவில் பிறந்த இவர், நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசாமல் அழகான தமிழில் பேசுவது மட்டுமில்லாமல் தமிழ் பாடல்களையும் பாடி வருகிறார். அவர் யார் என்பதை இந்த செய்தியில் தெரிந்து கொள்ளலாம்.
பாடகியான கெனிஷா பிரான்சிஸ் ஒரு தமிழ் பெண் ஆவார். இவரின் அப்பா ஒருவர் தமிழராம், அம்மா ஆப்ரிக்கர். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

கென்யாவில் பிறந்து வளர்ந்த கெனிஷா அங்கே தனது படிப்பை முடித்துள்ளார். பின் இவர்கள் பெங்களுரில் செட்லாகி உள்ளனர். கெனிஷாவை போலவே, இவரது அம்மா மற்றும் அப்பா இருவருமே பாடகர்களாம். அம்மா எஸ்பி பாலசுப்பிரமணியத்துடன் சேர்ந்து பாடி இருக்கிறார். என் குடும்பமே இசைக்குடும்பம் என்பதால், இசை ஆர்வம் என்பது எனக்கு இயற்கையாகவே அமைந்துவிட்டது. இதனால், நாங்கள் குடும்பத்துடன் சேர்ந்து சர்ச்சில் பாடுவோம். அப்போது ஒருவர் இறைவனின் கிருபை உனக்கு இருக்கு, நன்றாக பாடுவதாக கூறினார். அன்றில் இருந்து பாடல் பாடுவதில் எனக்கு ஆர்வம் அதிகமாகிவிட்டது.
கெனிஷா பிரான்சிஸ்: பாட்டு பாடுவது மட்டுமில்லாமல், லத்தின் நடனமும் ஆட கற்றுக்கொண்டேன்,எனக்கு எட்டு வகையான லத்தின் நடனம் தெரியும். அதை நான்கு வருடமாக கற்றுக்கொண்டேன், அதன் பின் தான் பாடல் பாடிக்கொண்டே நடனமாடத் தொடங்கினேன்.நடனம் தான் எனக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது. ஜிம் போவது, வியர்க்க வியர்க்க வொர்க் அவுட் செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை, நடனம் ஆடுவது தான் என் உடற்பயிற்சி என்றார்.
தொடர்ந்து பேசிய அவர்,விட்னி ஹூஸ்டன், பியோனஸ், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரால் ஊக்கப்படுத்தப்பட்டது. அதில், பல மேடைகளில் பல பாடல்களை பாடி உள்ளேன். ஆங்கிலம், இந்தி,தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற 6 மொழிகளில் பாடிக்கொண்டே நடனமாடுவது எனக்கு பிடித்தமான ஒன்று என்றார்.
ஸ்பிருச்சுவல் ஹீலிங் : இந்தியாவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பாடியுள்ள கெனிஷா, ஸ்பிருச்சுவல் ஹீலிங் மற்றும் ரெய்கி சிகிச்சை மூலம் மன அழுத்தம், பதட்டம் மற்றும் பிற சிக்கல்களிலிருந்து குணமடைய சிகிச்சை அளித்து வருகிறார். இதன் மூலம் சுமார் 100 க்கும் மேற்பட்டவர்களை குணப்படுத்தியுள்ளார் கெனிஷா. வார நாட்களான சனிக்கிழமை ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று அவர்களுடன் பேசுவேன் என்று அந்த பேட்டியில் தன்னை பற்றி கூறியுள்ளார் கெனிஷா.


Click it and Unblock the Notifications











