I Am sorry ஐயப்பா.. சர்ச்சையில் சிக்கிய இசைவாணி.. களமிறங்கிய சேட்டன்கள்!

சென்னை: நீலம் பண்பாட்டு மையம் ஏற்பாடு செய்த விழாவில் கானா பாடகி இசைவாணி, 'ஐ எம் சாரி ஐயப்பா' என்று ஐயப்பனையும், ஐயப்பா பக்தர்களையும் இழிவுபடுத்தும் வகையில் பாடல் பாடி இருந்தார். இது தமிழக மக்களை மட்டுமில்லாமல் கேரள மக்களிடமும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாடகி இசைவாணி ஐயப்பன் குறித்தும், அவருக்காக பக்தர்கள் மேற்கொள்ளும் விரதங்களை கொச்சைப்படுத்தும் வகையிலும் பாடல் பாடி இருந்தார். இது இணையத்தில் டிரெண்டான நிலையில், கானா இசைவாணி மற்றும் இயக்குநர் பா.ரஞ்சித் மீது கோவை மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இந்து கடவுளையும், வழிபாட்டு முறையையும் கொச்சைப்படுத்தும் வகையில் பாடல் பாடிய இசைவாணி, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த நீலம் பண்பாட்டு மையம் மீது நடவடிக்கை எடுக்க என அனைத்து ஐயப்ப பக்தர்கள் சங்கத்தினரும் புகார் அளித்து இருந்தனர்.

isaivani pa ranjith ayyappa song


ஐ எம் சாரி ஐயப்பா: இதையடுத்து நீலம் பண்பாட்டு மையம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் இருக்கும் பெண்கள் சபரிமலைக்கு செல்வது குறித்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பாலின பாகுபாட்டை முன்வைத்து பெண்களுக்கு உரிமை மறுக்கப்படக்கூடாது என்று தீர்ப்பளித்தது. அந்த நேரத்தில் தான் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைப்பில் The Casteless Collective என்கிற இசை குழு உருவானது. அப்போது தான், “ஐ எம் சாரி ஐயப்பா” என்கிற பாடல் உருவாகி அப்போது முதல் இந்த பாடல் பாடப்பட்டு வருகிறது.

விஷமிகளின் வேலை: அது ஐயப்பன் சம்மந்தப்பட்ட பாடலே அல்ல. பெண்களின் பல்வேறு உரிமைகளைக் கோரும் பாடல், பெண்கள் கோயில் நுழையும் உரிமை கோரும் பாடலாகும், அந்த உண்மையை மறைத்து, மொத்தப் பாடலும் குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு எதிரானதாக சமூக வலைதளத்தில் சில விஷமிகள் பொய்யான செய்தியைப் பரப்பி வருகின்றனர். எங்கள் நோக்கத்தை புரிந்து கொண்டு செயல்படும், ஜனநாயகத்தை நம்பும் சக்திகள் ஒவ்வொருவரும், பாடகி இசைவாணிக்கு துணை நிற்க கேட்டுக் கொள்கிறேன் என கூறியிருந்தார்.

கொந்தளிப்பில் கேரள மக்கள்: இந்நிலையில் இந்துக்களுக்கு எதிரான அமைப்பு ஒன்று கேரளாவில் இசை நிகழ்ச்சி ஒன்று நடத்த அனுமதி கேட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் இசைவாணியை பாட வைக்க முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இசைவாணி சபரிமலைக்கு செல்ல ஏற்பாடுகள் முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவல் கேரள மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், இசைவாணி மீது கடும் கோவத்தில் இருக்கும் கேரள மக்கள் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X