''I m Sorry ஐயப்பா'' இந்து மதத்தை இழிவுப்படுத்தலாமா? கஸ்தூரிக்கு ஒரு நீதி? இசைவாணிக்கு ஒரு நீதியா?
சென்னை: தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததற்காக நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இந்து மத கடவுளை இழிவு படுத்தும் வகையில் பாட்டு பாடி உள்ள இசைவாணியை தமிழக அரசு ஏன் கைது செய்யவில்லை என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நவம்பர் 3ஆம் தேதி சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் பிராமணர்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கலந்து கொணடு பேசினார். அதில், தெலுங்கு மொழி பேசும் மக்கள் குறித்தும், தெலுங்கு பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த புகாரின் அடிப்படையில், நடிகை கஸ்தூரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நடிகை கஸ்தூரி சர்ச்சை பேச்சு: அவரை கைது செய்ய போலீசார் முயன்ற போது ஹைதராபாத்தில் தலைமறைவாகிவிட்டதாக கூறப்பட்டதை அடுத்து, காவல் துறையினர் தனிப்படை அமைத்து கஸ்தூரியை 17ஆம் தேதி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மகளிர் சிறையில் அடைத்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்ட நடிகை கஸ்தூரிக்கு எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
சர்ச்சையில் சிக்கும் இசைவாணி: நடிகை கஸ்தூரியின் பஞ்சாயத்து ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் இணையவாசிகள் ஒரு புது பிரச்சனையை கிளறி விட்டு இருக்கிறார்கள். அதாவது பா ரஞ்சித் நடத்தும் நீலம் பண்பாட்டு மையத்தில் நடத்தப்பட்ட ஒரு விழாவில் இந்து மத கடவுளை இழிழபடுத்தும் வகையில் பாடகி இசைவாணி பாடி இருப்பதாக இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பாடகி இசைவாணி அதில் 'ஐ எம் சாரி ஐயப்பா.. உள்ளே வந்தா தப்பாப்பா' அப்படின்னு பாடி இருக்கிறார். இது தமிழ் இந்து மத கடவுளை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக கூறி உள்ளனர்.
இதெல்லாம் நியாயமே இல்லை: தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக நடிகை கஸ்தூரியை கைது செய்த தமிழக அரசு, இசைவாணியை கைது செய்யுமா என்றும், கஸ்தூரிக்கு ஒரு நியாயம், இசைவாணிக்கு ஒரு நியாயமா என்ற கருத்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். ஒரு வழியாக கஸ்தூரியின் பஞ்சாயத்து முடிவுக்கு வந்த நிலையில், ஒரு புது பிரச்சனையை இணையவாசிகள் கிளறி விட்டு இருக்கிறார்கள். இது எங்கே போய் முடியப்போகிறதோ தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











