ரிஷப்ஷனில் எமோஷனலான இசைவாணி.. அந்த அரசியல்வாதியோடு அப்படியொரு கனெக்ட்டா?

சென்னை: ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த வடசென்னை கானா இசை உலகிற்குள் கெத்தாக நுழைந்து, தன் ஸ்ட்ராங்கான குரலால் தனி முத்திரை பதித்தவர் பாடகி இசைவாணி. சமூக அக்கறை கொண்ட பாடல்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர், குறிப்பாக தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் என்ற இசைக்குழுவில் இசைவாணி மிகவும் முக்கியமான பாடகராக விளங்கினார். பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.

இப்படி இருக்கையில், இசைவாணி தனது நீண்ட நாள் நண்பரும் காதலருமான அப்துல் மொய்தீனை அண்மையில் திருமணம் செய்துகொண்டு புது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர்களது சிம்பிளான திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பயங்கர வைரலான நிலையில், நேற்று நடந்த இவர்களது பிரம்மாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடந்த ஒரு சுவாரசிய சம்பவம் தான் தற்போது சோஷியல் மீடியாவின் ஹாட் டாப்பிக்காக மாறி உள்ளது.

மேடையில் எகிறிய எமோஷன்: அதாவது, புதுமண தம்பதிகளை வாழ்த்த திரைப்பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் குவிந்த நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி மணமக்களை வாழ்த்த, வரவேற்பு நிகழ்ச்சிக்குச் சென்றார். அவரைப் பார்த்த அடுத்த நொடியே இசைவாணியின் முகத்தில் அப்படியே மகிழ்ச்சி வெள்ளம் பொங்கியது என்று கூறலாம். உடனே ஓடிப்போய் கனிமொழியை இறுக்கமாகக் கட்டியணைத்து, தன் அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்தினார் இசைவாணி.

Singer Isaivani Turns Emotional on Seeing Kanimozhi at Her Wedding Reception

அந்தத் தருணத்தில் இசைவாணி பயங்கர எமோஷனல் ஆகிவிட்டார் என்பது, இது தொடர்பான வீடியோவைப் பார்த்தாலே தெரிகிறது. அருகில் இருந்தவர்கள் கூட இந்த நெகிழ்ச்சியான பாசப் போராட்டத்தை ஆச்சரியத்துடன் வாய் பிளந்து பார்த்துள்ளனர். இதையடுத்து கனிமொழியும் மணமக்களுடன் சில நிமிடங்கள் சகஜமாக உரையாடி, தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டுச் சென்றார்.

அரசியல் இல்லப்பா.. அக்மார்க் பாசம்: கனிமொழியைப் பார்த்ததும் இசைவாணி எகிறித் குதித்து வரவேற்ற காட்சியும், இருவரும் கட்டியணைத்து பாசத்தைப் பொழிந்த தருணங்களும் தற்போது வீடியோவாக வெளியாகி சமூக வலைதளங்களில் தாறுமாறாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்து லைக்குகளைக் குவித்து வரும் வேளையில், கமெண்ட் செக்ஷனில் நெட்டிசன்கள் தங்களது பாணியில் விளாசி வருகிறார்கள். "இது வெறும் அரசியல் சந்திப்பு கிடையாது, அக்மார்க் பாசத்தின் வெளிப்பாடு!", "இசைவாணியின் முகத்தைப் பார்த்தாலே தெரியுது, அவர் எவ்வளவு ஹாப்பியா இருக்கார்னு!", "நிஜமாவே மனதை நெகிழ வச்ச தருணம்ப்பா" என ரசிகர்கள் எமோஷனலாக கமெண்ட்டுகளைப் பறக்கவிட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X