என்ன சிம்ரன் இதெல்லாம்.. வெறும் டவலுடன் போஸ் கொடுத்த பாடகி.. விளாசும் நெட்டிசன்ஸ்!

சென்னை: திரையுலகில் மிகவும் பிரபலமான பின்னணி பாடகிகளில் ஒருவர் ஜோனிடா காந்தி. இவர் அனிருத், ஏ.ஆர். ரஹ்மான் போன்ற பல முன்னணி இசையமைப்பாளர்களுடன் பாடி வருகிறார். இவர் பாடகியாக இருந்தாலும், இன்ஸ்டாகிராமில் விதவிதமான போட்டோவை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்து இருப்பதால், இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை சுமார் இரண்டு மில்லியன் பாலோவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இவர் பகிர்ந்துள்ள போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

பாலிவுட்டிலும் தமிழிலும் மிக முக்கிய பாடகிகளில் ஒருவராக திகழ்கிறார் ஜோனிடா காந்தி. இவர் பாடிய அரபிக்குத்து பாடல் திரைப்பிரபலங்கள், இளசுகள், பெருசுகள் என அனைவருக்கும் பிடித்துப்போய் அரபிக்குத்து பீவர் ஓவராக சோஷியல் மீடியாவில் ரீல் வீடியோவை போட்டு தெறிக்கவிட்டனர். இந்த பாடலை அனிருத்துடன் இணைந்து பாடியவர் ஜோனிடா காந்தி.

Singer jonita gandhi glamour photos trending on social media

அரபிக்குத்து பாடகி: புது டெல்லியில் பிறந்த ஜோனிடா காந்தி, பின் கனடாவில் செட்டிலானார். இதையடுத்து, அவரை ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், முதன்முதலில் திரையில் அறிமுகம் செய்து வைத்தார். மணிரத்தினம் இயக்கத்தில் உருவான ஓ காதல் கண்மணி படத்தில் வரும் மனம் மனம் மென்டல் மனமே பாடலை பாடி இளசுகள் மனதில் இடம் பிடித்தார். இதையடுத்து காற்றுவெளியிட, வேலைக்காரன், டாக்டர் போன்ற படங்களில் பாடி உள்ளார். டாக்டர் திரைப்படத்தில் அனிருத்துடன் இணைந்து ஜோனிடா பாடிய செல்லம்மா செல்லம்மா மிகக்பெரிய அளவில் ஹிட்டடித்தது.

Singer jonita gandhi glamour photos trending on social media

ஹீரோயினாக: பாடகியாக வலம் வரும் ஜோனிடா காந்தி, விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரிப்பில் உருவாக உள்ள ''walking talking strawberry ice cream'' படத்தில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். இப்படத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்த கிருஷ்ண குமார் கதாநாயகனாக நடிக்கிறார். விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குநராக இருந்த விநாயக் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

Singer jonita gandhi glamour photos trending on social media

என்ன சிம்ரன் இதெல்லாம்: நடிப்பு, பாட்டு என பிஸியாக இருக்கும் ஜோனிடா காந்தி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சியான போட்டோ ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது. அந்த போட்டோவில் இவர், வெறும் டவலை மட்டுமே கட்டிக்கொண்டு கண்ணாடி முன் நின்று போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலர் என்ன சிம்ரன் இதெல்லாம் என்றும், பாடகியா? மாடல் அழகியா? என கேட்டு இணையத்தில் அந்த போட்டோவை டிரெண்டாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X