கவர்ச்சியில் ஹாலிவுட் தரம்.. கிக் ஏற்றும் பாடகி ஜோனிதா காந்தி ஹாட் பிக்ஸ்!

சென்னை: பின்னணி பாடகிகளில் ஒருவர் ஜோனிதா காந்தி. இவர் அனிருத், ஏ.ஆர். ரஹ்மான் போன்ற பல முன்னணி இசையமைப்பாளர்களுடன் பாடி வருகிறார். இவர் பாடகியாக இருந்தாலும், இன்ஸ்டாகிராமில் விதமான போட்டோவை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்து இருப்பதால், இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை சுமார் இரண்டு மில்லியன் பாலோவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில் இருக்கும் கவர்ச்சியான போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

Singer jonita gandhi glamour photos

பாலிவுட்டிலும் தமிழிலும் மிக முக்கிய பாடகிகளில் ஒருவராக திகழ்கிறார் ஜோனிதா காந்தி. இவர் பாடிய அரபிக்குத்து பாடல் திரைப்பிரபலங்கள், இளசுகள், பெரிசுகள் என அனைவருக்கும் பிடித்துப்போய் அரபிக்குத்து பீவர் ஓவராக சோஷியல் மீடியாவில் ரீல் வீடியோவை போட்டு தெறிக்கவிட்டனர். இந்த பாடலை அனிருத்துடன் இணைந்து பாடியவர் ஜோனிதா காந்தி.

Singer jonita gandhi glamour photos

அரபிக்குத்து பாடகி: புது டெல்லியில் பிறந்த ஜோனிதா காந்தி, பின் கனடாவில் செட்டிலானார். இதையடுத்து, அவரை ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், முதன்முதலில் திரையில் அறிமுகம் செய்து வைத்தார். மணிரத்தினம் இயக்கத்தில் உருவான ஓ காதல் கண்மணி படத்தில் வரும் மனம் மனம் மென்டல் மனமே பாடலை பாடி இளசுகள் மனதில் இடம் பிடித்தார். இதையடுத்து காற்றுவெளியிட, வேலைக்காரன், டாக்டர் போன்ற படங்களில் பாடி உள்ளார். டாக்டர் திரைப்படத்தில் அனிருத்துடன் இணைந்து ஜோனிடா பாடிய செல்லம்மா செல்லம்மா மிகக்பெரிய அளவில் ஹிட்டடித்தது.

Singer jonita gandhi glamour photos

ஹீரோயின்: பாடகியாக வலம் வரும் ஜோனிதா காந்தி, விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரிப்பில் உருவாக உள்ள ''walking talking strawberry ice cream'' படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். இப்படத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்த கிருஷ்ணா குமார் கதாநாயகனாக நடிக்கிறார். விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குநராக இருந்த விநாயக் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார்.

Singer jonita gandhi glamour photos

கவர்ச்சி போட்டோ: நடிப்பு, பாட்டு என பிஸியாக இருக்கும் ஜோனிதா காந்தி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நீச்சல் குளத்தில் அட்டகாசமாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவில் தோழியுடன் கண்ணாடி கிளாசுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை மலைபோல் குவித்து வருகின்றனர். மேலும், பலர் பாடகியா? கவர்ச்சி அழகியா? என கேட்டு இணையத்தில் அந்த போட்டோவை டிரெண்டாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X