விக்கி படத்தில் கமிட்டான அனிருத்தின் 'செல்லம்மா'.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை: ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கும் வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ் க்ரீம் படத்தில் பிரபல பாடகி இணைந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல காதல் ஜோடியாக வலம் வருபவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்.

நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு இருவரும் காதலிக்க தொடங்கினர். இருவரும் லிவிங் டுகெதரில் வசித்து வருகின்றனர்.

கோவா டூர்

கோவா டூர்

கடந்த ஆண்டின் பெரும்பாலான நாட்கள் கொரோனா லாக்டவுன் நடைமுறையில் இருந்ததால் விக்கி - நயன் ஜோடி வெளி நாடுகளுக்கு பெரிதாக சுற்றுலா சென்றதாக தெரியவில்லை. மாறாக கோவாவுக்கு சென்றனர். அந்த போட்டோக்கள் வைரலானது.

படங்கள் தயாரிப்பு

படங்கள் தயாரிப்பு

இதனிடையே நயனும் விக்கியும், ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி சில திரைப்படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகிறார்கள். இதுவரை நெற்றிக்கண், கூழாங்கல் போன்ற படங்களை இவர்களின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம்

வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம்

தற்போது விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடிக்கும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தை இயக்கி தயாரிக்கிறார்.
இந்நிலையில் அடுத்ததாக ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் 'வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்' என்ற படத்தை தயாரிக்கிறது.

ஹீரோயினாக அறிமுகம்

ஹீரோயினாக அறிமுகம்

விக்னேஷ் சிவனிடம் இணை இயக்குநராக பணிபுரிந்த விநாயக் இந்தப் படத்தை இயக்குகிறார். ரொமாண்டிக் காதல் கதையாக உருவாகும் இந்தப் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார் ஜொனிடா காந்தி.

அனிருத்துடன் காதல்?

அனிருத்துடன் காதல்?

தமிழில் 'டாக்டர்' படத்தில் இவர் பாடிய 'செல்லம்மா' பாடல் பெரும் பிரபலமானது. இதனிடையே அனிருத்துக்கும் பாடகி ஜொனிடா காந்திக்கும் காதல் என்றும் தகவல் பரவியது. ஆனால் அதுகுறித்து இருவருமே இதுவரை வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X