பாடகியா?மாடல் அழகியா?அட்டை படத்திற்காக தாறுமாறு போஸ் கொடுத்த..அரபிக் குத்து ஜோனிடா காந்தி!

சென்னை : அரபிக்குத்து பாடலை பாடிய ஜோனிட்டா காந்தி அட்டை பட விளம்பரத்திற்காக தாறுமாறாக போஸ் கொடுத்துள்ளார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, யோகிபாபு, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் இடம் பெற்ற ஹலமதி ஹபிபோ.... ஹலமதி ஹபிபோ....என்ற பாடலை தற்போது வரை அனைவரும முனுமுனுத்துக்கொண்டு இருக்கின்றனர்.

அரபிக்குத்து பீவர்

அரபிக்குத்து பீவர்

பாலிவுட்டிலும் தமிழிலும் மிக முக்கிய பாடகிகளில் ஒருவராக திகழ்கிறார் ஜோனிட்டா காந்தி. இவர் பாடிய அரபிக்குத்து பாடல் திரைப்பிரபலங்கள், இளசுகள், பெரிசுகள் என அனைவருக்கும் பிடித்துப்போய் அரபிக்குத்து பீவர் ஓவராக சோஷியல் மீடியாவில் ரீல் வீடியோவை போட்டு தெறிக்கவிட்டனர். இந்த பாடலை அனிருத்துடன் இணைந்து பாடியவர் ஜோனிட்டா காந்தி.

மனம் மனம் மென்டல் மனமே

மனம் மனம் மென்டல் மனமே

புது டெல்லியில் பிறந்த இவர் பின் கனடாவில் செட்டிலான இவர், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், முதன்முதலில் திரையில் அறிமுகம் செய்து வைத்தார். மணிரத்தினம் இயக்கத்தில் உருவான ஓ காதல் கண்மணி படத்தில் வரும் மனம் மனம் மென்டல் மனமே பாடலை பாடி இளசுகள் மனதில் இடம் பிடித்தார். இதையடுத்து காற்றுவெளியிட, வேலைக்காரன், டாக்டர் போன்ற படங்களில் பாடி உள்ளார். டாக்டர் திரைப்படத்தில் அனிருத்துடன் இணைந்து ஜோனிடா பாடிய செல்லம்மா செல்லம்மா மிகக்பெரிய அளவில் ஹிட்டடித்தது.

ஹீரோயினாக

ஹீரோயினாக

பாடகியாக வலம் வரும் ஜோனிட்டா காந்தி, விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரிப்பில் உருவாக உள்ள ''walking talking strawberry ice cream'' படத்தில் ஹீரோயினாக அறிமுமாக உள்ளதாக உள்ளார். இப்படத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்த கிருஷ்ணா குமார் கதாநாயகனாக நடிக்கிறார். விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குநராக இருந்த விநாயக் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

பாடகியா?மாடல் அழகியா?

பாடகியா?மாடல் அழகியா?

நடிப்பு, பாட்டு என பிஸியாக இருக்கும் ஜோனிடா காந்தி Rolling Stone புத்தகத்தின் அட்டைப் பக்கத்திற்காக படு கிளாமராக பைக்கிள் அமர்ந்தபடி போஸ் கொடுத்துள்ளார். ஜோனிடாவின் கவர்ச்சி போட்டோவை பார்த்த ரசிகர்கள் பாடகியா?மாடல் அழகியா? என கேட்டு இணையத்தில் அந்த போட்டோவை டிரெண்டாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X