தினமும் பாலியல் தொல்லை.. என்னால தாங்க முடியல.. அரபிக் குத்து பாடகி வேதனை!

சென்னை: பிரபலமான பின்னணி பாடகிகளில் ஒருவர் ஜோனிடா காந்தி. இவர் அனிருத், ஏ.ஆர். ரஹ்மான் போன்ற பல முன்னணி இசையமைப்பாளர்களுடன் பாடி வருகிறார். இவர் பாடகியாக இருந்தாலும், இன்ஸ்டாகிராமில் விதமான போட்டோவை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார். அண்மையில், இவர் தனக்கு நடக்கும் பாலியல் சீண்டல்கள் குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார்.

டெல்லியில் பிறந்த ஜோனிடா காந்தி, பின் கனடாவில் செட்டிலானார். இதையடுத்து, அவரை ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், முதன்முதலில் திரையில் அறிமுகம் செய்து வைத்தார். மணிரத்தினம் இயக்கத்தில் உருவான, ஓ காதல் கண்மணி படத்தில் வரும் "மனம் மனம் மென்டல் மனமே" பாடலை பாடி இளசுகள் மனதில் இடம் பிடித்தார் ஜோனிடா. இதையடுத்து காற்றுவெளியிட, வேலைக்காரன், டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களில் பாடி உள்ளார். டாக்டர் திரைப்படத்தில் அனிருத்துடன் இணைந்து ஜோனிடா பாடிய செல்லம்மா செல்லம்மா பாடல் மிகக்பெரிய அளவில் ஹிட்டடித்தது.

singer jonita gandhi
Photo Credit:

பாடகி ஜோனிடா காந்தி: பாடகியாக வலம் வரும் ஜோனிதா காந்தி, விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரிப்பில் உருவாக உள்ள ''walking talking strawberry ice cream'' படத்தில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். இப்படத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்த கிருஷ்ணா குமார் கதாநாயகனாக நடித்திருந்தார். விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குநராக இருந்த விநாயக் இப்படத்தை இயக்கி இருந்தார். அண்மையில் ஜோனிடா காந்தி அளித்த பேட்டியில், தான் சந்தித்த பாலியல் சீண்டல் குறித்து பேசி உள்ளார். இன்ஸ்டாகிராமில் என் நண்பர்களின் பதிவை பார்த்துக் கொண்டிருந்த போது நான் ஒரு விஷயத்தை பார்த்து அதிர்ந்துவிட்டேன்.

பாலியல் தொல்லை: ஒரு ஆண் தனது அந்தரங்கப் பகுதியைப் பகிர்ந்து அதற்கு பின் எனது போட்டோவை வைத்திருந்தான். ஆபாசமான அந்த போட்டோவை பார்த்து நான் அதிர்ந்து போனேன். இது போன்ற அசிங்கமான நபர்களை நான் பிளாக் செய்து விடுவேன். இது மாதிரியான சம்பவங்களை நான் பெரிதாக எடுத்துக் கொள்வது கிடையாது என்பதால் யார் மீதும் வழக்குத் தொடரவில்லை. ஆனால் இதுவும் ஒரு பாலியல் சீண்டல்தான், இதுபோலவே பலர் தினமும் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள் என்று பாடகி ஜோனிடா காந்தி அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X