மனஅழுத்தம்.. 10 தூக்க மாத்திரை சாப்பிட்டேன்... கல்பனா வெளியிட்ட திடீர் வீடியோ!
சென்னை: பிரபல பின்னணிப் பாடகி கல்பனா ராகவேந்தர் , ஹைதராபாத்தில் தனது இல்லத்தில் அதிகமான தூக்க மாத்திரையை சாப்பிட்டு, சுயநினைவின்றி கிடந்தார். அவரை மீட்ட, போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கும் அவரது கணவருக்கும் இருந்த பிரச்சனை காரணமாக அவர் இந்த விபரீத முடிவை எடுத்ததாக இணையத்தில் செய்திகள் வெளியானது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பாடகி கல்பனா, மன அழுத்தம் காரணமாக மாத்திரைகளை சாப்பிட்டேன் என்று கூறினார்.
பின்னணிப் பாடகரும், நடிகரும் இசையமைப்பாளருமான டி.எஸ். ராகவேந்திராவின் மகளான கல்பனா, ஐந்து வயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். என் ராசாவின் மனசுல படத்தில் வரும் போடா போடா புண்ணாக்கு பாடலை பாடி சினிமாவில் பாடகியாக அறிமுமான இவர், தமிழ், தெலுங்கு என ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட திரைப்படத்தில் பாடல்களை பாடி உள்ள இவர், கிட்டத்தட்ட 3,000 மேடைகளில் பாடியுள்ளார்.

கல்பனா பாடகி: ஹைதராபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பாடகி கல்பனாவின் வீட்டுக் கதவு,. இரண்டு மூன்று நாட்களாக மூடப்பட்டு, கதவு திறக்காமலே இருந்துள்ளது. குடியிருப்பு வாசிகள் நடத்தும் மீட்டிங்கில் கலந்து கொள்வதற்காக கல்பனாவை அழைக்க சென்ற போது. பலமுறை கதவை தட்டியும் தகவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடியிருப்பு வாசிகள் போலீசிற்கு தகவல் கொடுத்ததை அடுத்து, சுயநினைவு இல்லாமல் இருந்த கல்பனாவை போலீசார் மருத்துவமனையில அனுமதித்தனர்.
தற்கொலை முயற்சி இல்லை: இது தொடர்ந்து சோசியல் மீடியாவில் பாடகி கல்பனா குடும்பப் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக செய்திகள் பரவி, இதற்கு விளக்கம் அளித்துள்ள பாடகி கல்பனா, என்னைப்பற்றியும் என் கணவரை பற்றியும் சோசியல் மீடியால ஒரு தவறான வதந்தி பரவி வருகிறது. அதுபற்றி விளக்கம் கொடுப்பதற்காக தான் இந்த பதிவை நான் போட்டு இருக்கேன். நான், இந்த வயசுல பிஎச்டி, எல்எல்பி என நிறைய விஷயங்களை பண்ணிக்கிட்டு இருக்கேன், அதுமட்டுமில்லாமல், என்னுடைய இசை துறையின் மீதும் நான் ரொம்ப நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
10 தூக்குமாத்திரை: இதனால எனக்கு நிறைய மன அழுத்தங்கள் இதனால கடந்த சில ஆண்டுகளாகவே நான் சரியா தூங்கல. தூங்க முடியாத பிரச்சனையால் நான் அவதிப்பட்ட போது , நான் டாக்டரிடம் சென்றேன். அவர், இது இன்ஃபோமேனியா என்று அதற்கு, டாக்டர்கள் சில மருந்துகளை எனக்கு கொடுத்திருந்தார். அந்த மெடிசனோட அளவு கொஞ்சம் அதிகமாகி விட்டது. நான் தூங்க எட்டு மாத்திரைகளை எடுத்துக் கொண்டேன். ஆனால் அது உதவவில்லை. இதனால் நான் மேலும் 10 மாத்திரைகளை உட்கொண்டதால் அது என்னுடைய நுரையீரலை பாதித்து விட்டதால், நான் சுயநினைவை இழந்து விட்டேன்.

வதந்திகளை பரப்பாதீர்கள்: ஆனால், நான் இன்னைக்கு உயிரோட திரும்பி வந்து அனைவரிடமும் பேசுகிறேன் என்றால், அதற்கு காரணம் என் கணவர் எனக்காக பட்ட பாடு தான். என்னை காப்பாற்றுவதற்காக அவர் பட்ட கஷ்டம் சொல்லவே முடியாது. அதுமட்டுமல்லாமல், மீடியா, போலீஸ் என அனைவரும் கஷ்டப்பட்டு என்ன காப்பாத்தினாங்க இதனால நான் உயர் தப்பிச்சேன். தயவு செய்து எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம். என்னோட வாழ்க்கையில், எனக்கும் என் கணவருக்கும் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை, எனக்கு ரொம்ப நல்ல கணவர் கிடைச்சிருக்காரு, அழகான நல்ல மகளும் கிடைச்சிருக்காங்க இவங்க என் வாழ்க்கையில எனக்கு கிடைச்சதுக்கு கடவுளுக்கு நான் ரொம்ப நன்றி கடன் பட்டு இருக்கேன், தயவுசெய்து என்னை குறித்தும், என் கணவர் குறித்தும் தவறான வதந்திகளை பரப்பாதீர்கள். அதன் பிறகு என்ன நடந்தது என்று எனக்கு நினைவில் இல்லை'' என்று அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











