ரெஸ்ட் இல்லாம இருக்கேன்... சின்ன கேப்பில் வந்த வீடியோ.. பாடகி கல்பனா ஆவேசம்!

சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்பு பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியானது. மேலும், மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு தற்கொலைக்கான காரணம் குறித்து பலரும் பலவிதமாக பேசி வந்த நிலையில், தற்போது கல்பனா தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

இதற்கெல்லாம் காரணம் யார் தெரியுமா, வாய்க்கு வந்தபடி செய்தி போடாதீர்கள் என்றும் கல்பனா கோபத்துடன் பேட்டியளித்துள்ள வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. சினிமா பிரபலங்களின் பர்சனல் ஸ்பேஸில் தலையிட வேண்டாம் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

தூக்க மாத்திரை: பிரபல பின்னணி பாடகர் டி.எஸ்.ராகவேந்திராவின் மகளான இவர் 5 வயதில் இருந்தே இசைத்துறையில் கலக்கி வரும் கல்பனா , இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் போன்ற பிரபலங்களுடன் பணியாற்றியுள்ளார். கடந்த 4ஆம் தேதி ஹைதராபாத்தில் நிசாம்பேட்டையில் உள்ள வீட்டில் தற்கொலைக்கு முயன்றதாக முதலில் தகவல் வெளியானது. பின்பு பொய்யான தகவல் என கல்பனாவின் உறவினர்கள் தெரிவித்தனர். அம்மா தூக்க மாத்திரை சாப்பிட்டதால் டோஸ் அதிகமானதாகவும், தற்போது பரவும் செய்திகள் தவறானவை என்றும் கல்பனாவின் மகளும் தெரிவித்திருந்தார்.

singer kalpana angry kalpana angry speech kalpana interview

செய்தியாளர் சந்திப்பு: தற்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய கல்பனா சென்னையில் உள்ள பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்து கடும் கோபத்துடன் திட்டி பேசியுள்ளார். கோபத்துடன், "சில ஊடகங்கள், குறிப்பாக யூடியூபர்கள் என் மோசமான நிலையில் உண்மைக்கு புறம்பான விஷயங்களை பரப்பியுள்ளனர். எனக்கும் என் கணவருக்கும் என்ன பிரச்னை திரித்து போடுகின்றனர். என் வாழ்க்கையிலே நடந்த அற்புதமான விசயம் என் கணவர்தான். அவர் மாதிரி ஒருத்தர் என் லைஃப்ல கிடைத்ததற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நான் இப்போ வக்கீலுக்கும் படித்து வருகிறேன் என தெரிவித்தார்.

பிரச்னை: எனக்கும் என் குழந்தைக்கும் பிரச்னை இருந்தால் என்ன ஆகிடபோகுது. எந்த வீட்டில் குழந்தைக்கும் அம்மாவுக்கும் அல்லது தந்தைக்கும் சண்டை இல்லாமல் இருக்கிறது சொல்லுங்க பார்ப்போம். என் மகளுக்கு 19 வயது ஆகிறது. குடும்பம் என்று இருந்தால் பிரச்னை இருக்கத்தான் செய்யும். கடந்த 3 மாதமாக ரெஸ்ட் இல்லாமே இருக்கேன். மாத்திரை அதிகம் சாப்பிட்டதால் டோஸ் அதிகமாகி மயங்கிட்டேன். என் உடலில் பல பிரச்னைகள் இருக்கிறது. அன்று வீட்டில் தனியாகத்தான் இருந்தேன். வீடியோ காலில் நான் மயங்கி விழுவதை பார்த்த கணவர் பதறி போயிட்டார்.

கணவர் செய்த உதவி: என் கணவர் தான் போலீசுக்கு போன் பண்ணி கதவை உடைக்க சொல்லி மருத்துவமனையில் சேர்த்து விட உதவியாக இருந்தார். பின்னர் ஹைதராபாத் வந்து என்னை பார்த்துகொண்டார். இந்த கேப்பில் தான் தற்கொலை, கணவர் தான் காரணம் என செய்தி வந்துடுச்சு. இதுல தற்கொலை இப்படித்தான் நடந்திருக்கும் என்று வீடியோவுடன் செய்தியை பதிவிடுகின்றனர். உண்மையில் நடந்தது அவர்களுக்கு எப்படி தெரியும். நான் ஊடகங்களை எப்போதும் மதிப்பவள் என் குரலை மக்களிடம் கொண்டு செல்கிறார்கள். ஆனால் அவர்களில் சிலர் என்மீது சேற்றை வாரி எறிகிறார்கள், அது வாழ்க்கையில் ஏற்படுத்தும் பிரச்சனைகளை சரி செய்ய அதிக நேரம் எடுக்கும். அதை நீங்கள் சுயமாக சிந்திக்க வேண்டும் என்று கல்பனா கோபமாக பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X