மிரட்டும் கொரோனா.. பிரபல பின்னணி பாடகிக்குப் பாதிப்பு.. குடும்பத்துடன் தனிமையில் இருப்பதாகத் தகவல்!
சென்னை: பிரபல பின்னணி பாடகிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. சீனாவை அடுத்து இத்தாலி, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, இந்த வைரஸ்.
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கைப் பத்தாயிரத்தை தாண்டியுள்ளது.

5 பேர் உயிரிழப்பு
இந்தியாவிலும் கொரோனா, பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருந்தாலும் 206 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் தற்போது வரை 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவர் குணமாகி வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

படப்பிடிப்புகள் ரத்து
இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் அதிகமாகக் கூடும் மால்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவற்றை 31 ஆம் தேதி மூட உத்தர விடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள 990 தியேட்டர்கள் மூடப்பட்டன. சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டி.வி.சீரியல்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. சென்னையில் முக்கியமான கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு உத்தரவு
இந்நிலையில், நாட்டு மக்களுக்காக உரையாற்றிய பிரதமர் மோடி, மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலமே கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும், எனவே, வரும் 22 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவை கடை பிடிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்' என்று கூறி இருந்தார். அத்தியாவசிய பணிகளைத் தவிர்த்து வேறு எதற்காகவும் வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

கனிகா கபூர்
இந்நிலையில், பிரபல பின்னணி பாடகி கனிகா கபூருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர் இந்தியில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். இவர் கடந்த 10 நாட்களுக்கு முன் லண்டனில் இருந்து லக்னோ வந்துள்ளார். கடந்த 4 நாட்களாகக் காய்ச்சல் அறிகுறி இருந்ததாகவும் இதையடுத்து மருத்துவரை சந்தித்ததாகவும் அப்போது தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்ததாகவும் கனிகா தெரிவித்துள்ளார்.

இரண்டு நிகழ்ச்சிகள்
இதையடுத்து அவரும் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். மருத்துவர்கள் அறிவுரைப் படி சிகிச்சை எடுத்து வருவதாகக் கனிகா தெரிவித்துள்ளார். 'கடந்த 2 நாட்களாக இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அவருக்கு சளித் தொல்லை இருந்தது. இதையடுத்து அவரே டாக்டரை போய் சந்தித்தார். அதில் கொரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்தது என்று தெரிவித்துள்ளார், கனிகாவின் அப்பா, ராஜிவ் கபூர்


Click it and Unblock the Notifications











