மலையாள திரையுலகில் அறிமுகமாகும் கெனீஷா.. அடேங்கப்பா இப்படியொரு ரோலா?

சென்னை: ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தி ரவியை பிரிய முடிவு செய்து விவாகரத்து வழக்கு ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், பாடகி கெனிஷாவுடன் நட்பு பாராட்டி வந்தார். அவருடன் இணைந்து ஜோடியாக திருமண விழாவில் பங்கேற்றது, தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியது என சந்தோஷமாக தென்பட்ட ரவி மோகன் திடீரென கெனீஷா தன்னை விட்டுச் சென்றதாகவும் அதற்கு ஆர்த்தி ரவி தான் காரணம் என பிரஸ் மீட் வைத்து புலம்பினார்.

மேலும், சினிமாவில் தான் நடிக்கப் போவதில்லை என அறிவித்தார். ஆனால், சில நாட்களிலேயே லோகேஷ் கனகராஜின் எல்சியூவில் உருவாகும் பென்ஸ் படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், கெனீஷா மலையாள திரையுலகில் அடியெடுத்து வைக்கவுள்ளார் என்கிற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Singer Keneesha debut in Malayalam Cine Industry with Mud Fish Movie

பாடகி கெனீஷா: மனதை இதமாக்கும் குரலாலும், தனித்துவமான இசை பாணியாலும் இண்டி இசையுலகில் முத்திரை பதித்த கெனீஷா, தற்போது 'மட் பிஷ்' படம் மூலம் மலையாளத் திரையுலகில் அடியெடுத்து வைக்கிறார். இந்தப் புதிய அத்தியாயம் அவரது கலைப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்.

சுயாதீன இசை மற்றும் உலகளாவிய மேடை நிகழ்ச்சிகளால் புகழ் பெற்ற கெனீஷாவின் மாலிவுட் வருகை, திரைப்பட இசைக்கு புதுமையான சுவையைச் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய அத்தியாயம் அவரது வளர்ந்து வரும் திறனின் நேரடி வெளிப்பாடே.

மலையாள திரையுலகில் அறிமுகம்: கெனீஷாவுக்கு இசை என்பது உணர்வுகளை வெளிப்படுத்தவும், மக்களை இணைக்கவும், நேர்மறை ஆற்றலைப் பரப்பவும் உதவும் சக்திவாய்ந்த ஊடகம். மனதைத் தொடும் பாடல்களை உருவாக்கும் ஆர்வம் கொண்ட அவர், வெவ்வேறு மொழிகளிலும், துறைகளிலும் புதிய படைப்பு வாய்ப்புகளை ஆர்வத்துடன் ஏற்கிறார்.

ஜிதின் ஐசக் தாமஸ் இயக்கிய 'மட் பிஷ்' படத்தில் சன்னி வேய்ன் கதாநாயகனாக நடிக்கிறார். இதன் தனித்துவமான கதை, மண்ணின் மணம் கமழும் பாணி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. திரைப்படம் திரையரங்கு அனுபவத்தை முழுமையாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மட் பிஷ்: இப்படத்தில் இசை முக்கிய பங்காற்றுகிறது. கெனீஷாவின் பங்களிப்பு, திரைப்படத்தின் உணர்ச்சிகரமான ஆழத்தையும், அழகையும் சேர்க்கும் எனும் நம்பிக்கை உள்ளது. புதிய, சுவாரஸ்யமான கூட்டணிகளை நாடும் பல்வகைத் திறனையும் இது உறுதிப்படுத்துகிறது.

மலையாளத் திரையுலகில் கெனீஷாவின் 'மட் பிஷ்' அறிமுகத்தால் தொடங்கும் இந்தப் புதிய அத்தியாயத்தை, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர். படைப்பாற்றல், துணிவு மற்றும் இசையின் நிலையான சக்தி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இந்தப் பயணம், மேலும் பல வெற்றிகளைக் குவிக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X