Keneeshaa: இது லவ் தானே ஜெசினுதான் கேட்கல.. கெனிஷா போட்ட நச் போஸ்ட்.. புரியறவங்களுக்கு புரியுமாம்!

சென்னை: கடந்த ஆண்டில் இருந்தே நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து வழக்கில் ஜோடிக்கப்பட்டு பேசப்பட்டு வரும் பெயர் பாடகி கெனிஷா. கடந்த சில வாரங்களாக கெனிஷா குறித்து பல அவதூறான பேச்சுக்கள் அதிகமாக வந்த நிலையில், கெனிஷா கோபப்பட்டு, தான் நீதிமன்றத்திற்கு வரவும் தயார் என்று தெரிவித்தார். மேலும் அவர் தரப்பில் வக்கீல் நோட்டீஸ் வெளியிட்ட பின்னர்தான் இணையவாசிகள் அமைதியாக உள்ளனர்.

இந்த விவகாரத்தில் கெனிஷாவுக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்தார்கள். குறிப்பாக பாடகி சுசித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த கருத்துக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக பகிர்ந்தார் கெனிஷா. மேலும் இந்த பிரச்னையின் ஆரம்பத்திலேயே ரவி மோகன் மிகத் தெளிவாக கூறிய விஷயம், எனது சொந்த வாழ்க்கை குறித்து எதுவும் பேசாதீர்கள் என்று தெரிவித்திருந்தார். ரவி மோகன் இவ்வாறு கூறிய பின்னர் இணையவாசிகள் பலரும் அமைதியாகி விட்டார்கள்.

Singer Keneeshaa Shares Some Funny Pictures In Instagram With Thug Caption Goes Trending

ஆனால் கடந்த சில வாரங்களாக ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து சர்ச்சை குறித்து பரபரப்பாக பேச காரணம், ரவி மோகனும் கெனிஷாவும் நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றாக கலந்து கொண்டார்கள். அன்று மாலையே ஆர்த்தி, ரவி மோகன் குறித்து சரமாரியான குற்றச்சாட்டுக்களை அடுக்கிய தனது கடிதத்தை வெளியிட்டார். அதன் பின்னர் ரவி மோகன் தனது தரப்பில் பதிலடி கடிதத்தை வெளியிட்டார். ஆனாலும் இணையவாசிகள் நேரடியாகவும் ஆர்த்தி ரவி, மூன்றாவது நபர் என மறைமுகமாகவும் கெனிஷாவை கடுமையாக விமர்சித்தனர்.

கொலை மிரட்டல்: அதன் பின்னர் கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில அதிரடியான பதிவுகளை தனது தரப்பில் சில கடிதங்களையும் பதிவுகளையும் வெளியிட்டார். குறிப்பாக என்ன நடந்தது என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளாமல் உங்கள் மனதில் தோன்றுவதை எல்லாம் பேசாதீர்கள். நான் நல்ல குடும்பத்தில் இருந்து வந்த பெண். என் மீது அபாண்டமாக குற்றச்சாட்டுகளை சுமத்தாதீர்கள். என்னை உருவ கேலி செய்கிறார்கள். கொலை மிரட்டல்கள் கூட வருகிறது.

நீதிமன்றத்திற்கு வருகிறேன்: நான் குற்றமற்றவள் என்பதை நிரூபிக்க நான் நீதிமன்றத்திற்கு வரத் தயாராக இருக்கிறேன். என்னை தேவையில்லாமல் விமர்சனம் செய்பவர்களை கடவுள் பார்த்துக்கொள்வார். எனக்கு நீதியின் மீது நம்பிக்கை உள்ளது என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தார். கெனிஷா இப்படி குறிப்பிட்ட பின்னர் சிலர் கப்சிப் ஆனார்கள். ஆனாலும் சிலர் கடுமையாக விமர்சித்தார்கள். தன்னை கடுமையாகவும் கேவலமாகவும் விமர்சித்தவர்களின் பதிவுகளை கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். அதன் பின்னர் தனது தரப்பில் இருந்து வக்கீல் நோட்டீஸ் வெளியிட்டார். அதன் பின்னர்தான் கெனிஷா குறித்து எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்கள் இணையவாசிகள்.

Singer Keneeshaa Shares Some Funny Pictures In Instagram With Thug Caption Goes Trending

இது லவ் தானே ஜெசி: இந்நிலையில் கென்ஷா தற்போது ஒரு நாய் மற்றும் யானை குட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் இந்த புகைப்படங்களுக்கு, " அப்போ இதுதான் காதல்...ம்ஹும்.. இது தான் காதல்" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவை பார்த்த இணையவாசிகள் சிலர் கெனிஷா மறைமுகமாக எதையோ சொல்ல வருகிறார். இது புரிகிறவர்களுக்கு கட்டாயம் புரியும் என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள். மேலும் சிலர் என்ன கெனிஷா இப்படி விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை போல், இது லவ் தானே ஜெசி என்று கேட்பது போல மாறிவிட்டாரே என்று பதிவிட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X