சர்ச்சையை தூக்கிப்போடு.. தோழியுடன் ரவி மோகன்.. வயிற்றில் கைவைத்து நின்ற கெனிஷா!
சென்னை: பாடகி கெனிஷா மற்றும் நடிகர் ரவி மோகன் இருவரும் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஜோடியாக கலந்து கொண்டு அனைவரின் கவனத்தை ஈர்த்தனர். இந்த நிகழ்ச்சிக்கு வந்த ரசிகர்கள் இருவரையும் இணைந்து பார்த்ததில் மகிழ்ச்சியடைந்து, சமூக வலைதளங்களில் அவர்களது படங்களை வைரலாக்கி வருகின்றனர்.
நடிகர் ரவி மோகன் தனது பிறந்த நாளன்று நீதிமன்றத்தில் விவகாரத்து கோரி இருந்தார். இதைத்தொடர்ந்து ஆர்த்தி ரவி, தனது instagram பக்கத்தில் தன்னுடைய அனுமதி இல்லாமலேயே, ரவி மோகன் விவாகரத்து செய்யும் முடிவை எடுத்து இருப்பதாகவும், அவரை சந்தித்து பேச வேண்டும் என பதில் அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில், ஐசரி கணேஷ் அவர்களின் மகள் திருமணத்தில் நடிகர் ரவி மோகன் தன்னுடைய தோழி கெனிஷாவுடன் கைகளை கோர்த்தபடி வந்திருந்தார். அது மட்டுமல்லாமல் இருவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்து வந்திருந்தது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக பேசப்பட்டது. பலரும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா என்று சந்தேகத்தை எழுப்பினார்கள்

நடிகர் ரவி மோகன்: இப்படி இவர்களின் பஞ்சாயத்து சென்று கொண்டு இருந்த நிலையில், பாடகி கெனிஷா, சொந்த இசையில் "அன்றும் இன்றும்" வெளியிட்டு இருந்தார். இது இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் ரவி மோகனும், கெனிஷாவும் இலங்கை சென்று வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தை நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர்.
பாடகி கெனிஷா: நடிகர் ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் நெருக்கமாக இருப்பது சினிமா வட்டாரத்தில் பேசப்படும் பொருளாக மாறியுள்ளது. இருவரும் இதுவரை தங்கள் உறவு பற்றி வெளிப்படையாக எதையும் அறிவிக்கவில்லை என்றாலும், இசை நிகழ்வுகள், வெளிநாட்டுப் பயணங்கள், கோவிலுக்கு செல்வது என எதுவாக இருந்தாலும் சேர்ந்தே செய்து வருகின்றனர். தற்போது ரவி மோகனும் கெனிஷாவும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது டிரெண்டாகி வருகிறது. நடிகர் ரவி மோகன் தற்போது 'ஜினி' திரைப்படத்திலும், கரத்தே பாபு படத்தில் நடித்து முடித்துள்ளார். அதே போல, சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் 'பரசக்தி' திரைப்படத்தில் முதன்முறையாக நெகட்டிவ் ரோலில் நடித்து வருகிறார். மேலும், கார்த்திக் யோகி கூட்டணியில் உருவாகும் 'புரோ கோட்' படத்தை ரவிமோகனின் தயாரிப்பு நிறுவனமே தயாரித்து வருகிறது.


Click it and Unblock the Notifications