ஜெயம் ரவி கோவாவில் இந்த பாடகியுடன் தான் இருந்தாரா?.. யாரு இந்த கெனிஷா பிரான்சிஸ்.. பாவம் ஆர்த்தி!

சென்னை: சைரன் படத்தின் இயக்குநர் ஆண்டனி பாக்கியராஜ் திருமணத்துக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ஜெயம் ரவி தனது மனைவி மற்றும் மாமியார் என குடும்பத்துடன் பங்கேற்று இருந்தார். அதுவரை சந்தோஷமாக இருந்து வந்த ஜெயம் ரவி குடும்பம் அதன் பின்னர் பாடகி கெனிஷா பிரான்சிஸ் வரவால் தான் இந்த நிலைமைக்கு சென்றதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் தனுஷ் உடனான நட்பு தான் ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவியை பிரித்து விட்டது என்றெல்லாம் வழக்கம் போல விவாகரத்து ஆனதுமே பழியை தனுஷ் மீது எழுதுங்க என்பது போல ஆர்த்தி ரவியையும் தனுஷையும் சமூக வலைதளத்தில் டேமேஜ் செய்ய ஆரம்பித்தனர்.

jayam ravi aarti ravi kenisha francis

ஆனால், தனுஷை அண்ணா என்று தான் ஆர்த்தி ரவி அழைத்து வருகிறார் என்றும் ஜெயம் ரவி தான் பாடகி கெனிஷாவுடன் ஒரு மாதம் கோவாவில் இருந்துள்ளதாக நக்கீரன் பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

யாரு இந்த கெனிஷா பிரான்சிஸ்?: Deaf Frogs எனும் ஆல்பத்தை சமீபத்தில் கெனிஷா பிரான்சிஸ் பாடியிருந்தார். அந்த ஆல்பத்தை நடிகர்கள் ஜெயம் ரவி, ஜீவா மற்றும் விஜய் ஆண்டனி வெளியிட்டனர். தான் ஜெயம் ரவியின் தீவிர ரசிகை என்றும் தன்னுடைய பாடலை பொன்னியின் செல்வன் நடிகர் வெளியிடப் போகிறாரா என ஷாக் ஆகி விட்டேன் என சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கெனிஷா பிரான்சிஸ் கூறியிருந்தார். திருமணமாகி விவாகரத்தான கெனிஷா தான் ஜெயம் ரவி - ஆர்த்தி ரவி விவாகரத்து காரணம் என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

கோவா, பெங்களூர் டூர்: பாடகி கெனிஷா மற்றும் ஜெயம் ரவி கோவாவில் தங்கியிருந்ததற்கும் இருவரும் ஒரே காரை ஓட்டிச் சென்று அபராதம் கட்டிய தகவல்களும் வெளியாகி உள்ளன. கோவாவில் மட்டுமின்றி பெங்களூருவிலும் ஜெயம் ரவி மற்றும் கெனிஷா ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாக கூறுகின்றனர்.

ஆர்த்தியை அனுமதிக்கவில்லை: ஜெயம் ரவி கோவாவில் இருக்கும் செய்தி அறிந்து அவரை சந்திக்க ஆர்த்தி சென்ற போது கூட கெனிஷா ஆர்த்தியை அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஜெயம் ரவியின் பிறந்தநாளுக்கு முன்பாக அவசர அவசரமாக மனைவியின் சம்மதம் இல்லாமல் ஜெயம் ரவி அவருடன் பேச்சுவார்த்தையும் நடத்தாம் ஏன் திடீரென அப்படியொரு விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டார் என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

jayam ravi aarti ravi kenisha francis

குழந்தைகளுடன் தவிக்கும் ஆர்த்தி ரவி: இரு மகன்களுடன் கணவரின் பிறந்தநாளை கொண்டாடலாம் என காத்திருந்த ஆர்த்தி ரவிக்கு ஜெயம் ரவி அளித்த பரிசு அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன் பின்னர், இதுபற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்றும் ஜெயம் ரவியுடன் பேசக் கூட யாரும் அனுமதிக்கவில்லை என்றும் இனிமேல் தன்னுடைய வாழ்க்கை முழுவதுமே மகன்களுக்கான வாழ்க்கை தான் என்றும் ஆர்த்தி ரவி வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து தான் இந்த விவாகரத்து மேட்டரில் ஆர்த்தி ரவி மீது எந்த தவறும் இல்லை என்றும் பாடகி கெனிஷா மீது ஜெயம் ரவி தான் காதலில் விழுந்து விட்டார் என்றும் கூறுகின்றனர்.

ஜெயம் ரவி மெளனம் கலைப்பாரா?: ஆனால், இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஜெயம் ரவி என்ன பதில் அளிக்கப் போகிறார் என்பதை எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். கூடிய விரைவிலேயே பிரதர், ஜீனி உள்ளிட்ட ஜெயம் ரவியின் படங்கள் வெளியாக உள்ள நிலையில், மெளனம் கலைப்பார் ஜெயம் ரவி என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X