கெனிஷாவுக்கு இப்படி ஒரு அடியா?.. நீதிமன்றம் போட்ட குண்டு.. எந்தப் பக்கம் திரும்பினாலும் பிரச்னைதானா?

சென்னை: ரவி மோகனுக்கும், ஆர்த்திக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு காதல் திருமணம் நடந்தது. மணமுடித்த பிறகு சிறந்த ஜோடியாக வலம் வந்துகொண்டிருந்தார்கள். இரண்டு மகன்களையும் பெற்றெடுத்தார்கள். ஆனால் கடந்த 2024ஆம் ஆண்டு ஆர்த்தியை பிரிவதாக திடீரென அறிவித்தார். அதனையடுத்து பின்னணி பாடகி கெனிஷாவுடன் நெருக்கமானார். ஆனால் அந்த ரிலேஷன்ஷிப்பும் பாதியில் முடிந்துவிட்டது என்று பேசப்படுகிறது.

தமிழ் சினிமாவின் நல்ல நடிகர்களில் ஒருவர் என்று பெயர் எடுத்தவர் ரவி மோகன். அவர் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து இரண்டு மகன்களுக்கு தந்தையானார். சூழல் இப்படி இருக்க ஆர்த்தியுடன் வாழ்வதற்கு தனக்கு பிடிக்கவில்லை என சொல்லி கடந்த 2024ஆம் ஆண்டு பிரிவை அறிவித்தார். அதனை ஆர்த்தி எதிர்பார்க்கவில்லை. எப்படியாவது ரவியுடன் சேர்ந்துவிட வேண்டும் என்று முட்டி மோதினார். ரவியோ தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்துவிட்டார். ஆர்த்தியின் தாயும் முயன்று பார்த்தார். ஆனால் இவர் அசைந்து கொடுக்கவில்லை.

Singer Kenishaa Faces Legal Trouble in Dubai Amid Ravi Mohan Controversy Court Imposes Fine
Photo Credit:

என்ன காரணம்?: இந்தப் பிரிவுக்கு பலரும் பல காரணங்களை சொன்னார்கள். அப்படிப்பட்ட நிலைமையில் தனக்கு எந்தவிதமான மரியாதையும் ஆர்த்தி தரப்பிலிருந்து கொடுக்கவில்லை. பணமே இல்லாமல் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டேன். வேலைக்காரர்களுக்கு கிடைத்த மரியாதைகூட எனக்கு கிடைக்கவில்லை என பல விஷயங்களை அடுக்கியிருந்தார். இப்போதைக்கு சங்கீதா விஜய் மீது வைத்திருக்கும் குற்றச்சாட்டுக்கள் போன்றே; ஆர்த்தி மீதும் அவரது தாய் மீதும் அப்போது ரவி வைத்த குற்றச்சாட்டுக்கள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தின.

Also Read
ஷூட்டிங்கிற்கு சிம்பு லேட்டாக வருவாரா?.. அரசன் கதை சொல்லும் தயாரிப்பாளர்.. எஸ்டிஆர் வேற லெவல்
ஷூட்டிங்கிற்கு சிம்பு லேட்டாக வருவாரா?.. அரசன் கதை சொல்லும் தயாரிப்பாளர்.. எஸ்டிஆர் வேற லெவல்

கெனிஷாவுடன் நெருக்கம்: இது ஒருபக்கம் இருக்க கெனிஷாவுடன் ரவிக்கு நெருக்கம் ஏற்பட்டது. முதலில் அதை மறுத்த அவர்; பின்னர் பொதுவெளிக்கு அவருடன் ஜோடியாக வர ஆரம்பித்தார். இப்போது அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்துவருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் ரவி தயாரிப்பு நிறுவனம் தொடங்கியபோதெல்லாம் முன்னணியில் கெனிஷாதான் நின்றுகொண்டிருந்தார். கொஞ்சம் கொஞ்சமாக ரவியின் குடும்பத்திலும் அவர் நெருக்கம் காட்டுவதாகவும் ஒரு தகவல் ஓடியது.

மீண்டும் பிரச்னை: சூழல் இப்படி இருக்க சில வாரங்களுக்கு முன்பு கெனிஷா வெளியிட்டிருந்த வீடியோவில் ரவி மோகனிடமிருந்து தான் விலகுகிறேன்; அவரது குடும்பத்தை நான் பிரிக்கவில்லை என்று எமோஷனலாக கூறியிருந்தார். அதனையடுத்து ஆர்த்தி ஒரு போஸ்ட் போட; ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கொந்தளித்து பேச என;மீண்டும் அந்த பிரச்னை தலை தூக்கியிருக்கிறது. இந்நிலையில் கெனிஷாவுக்கு இன்னொரு அடி விழுந்திருக்கிறது.

என்ன ஆனது?: அதாவது நாடு நாடாக சென்று பாடல்கள் பாடுபவர் கெனிஷா. அந்தவகையில் அவர் துபாயில் சென்று பாடல் பாடுவதாக இருந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க தனக்கு பணம் தரவில்லை என்று ஒரு தனியார் நிறுவனத்தின் மீது குற்றஞ்சாட்டி வீடியோ போட்டிருந்தார். அதனை அவரது தோழி ஒருவரும் ஷேர் செய்திருந்தார். இதனை கவனித்த அந்த நிறுவனமோ கெனிஷாவுக்கு தாங்கள் பணம் கொடுத்துவிட்டோம் என்று சொல்லி அவர் மீதும் அவரது தோழி மீதும் அவதூறு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இரண்டு பேருக்கும் ஐக்கிய அரபு அமீரக இணைய குற்ற சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் என அறிவித்தது. மேலும் இந்திய மதிப்பில் ஒரு லட்சத்து 29,000 ரூபாயை அபராதமாக செலுத்த உத்தரவிட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X