ஒரு நொடியும் ரவி மோகனை விட்டு பிரியாத கெனிஷா.. எங்கே போய் இருக்காங்குனு பாருங்க!

சென்னை: நடிகர் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக அறிக்கை வெளியிட்டதில் இருந்து, பாடகி கெனிஷாவுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இவர்கள் இருவரையும் ஒன்றாக பல இடத்தில் பார்க்க முடிகிறது. இவர்கள் இருவருக்கும் இடையிலான உறவு குறித்துப் பலவிதமான சர்ச்சைக்குரிய செய்திகள் இணையத்தில் பரவி வருகின்றன. இவர்களது நட்பு விரைவில் உறவாக மாறுமா என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக கடந்த செப்டம்பர் மாதம் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையை தொடர்ந்து ரவி மோகனின் பிறந்த நாளன்று நீதிமன்றத்தில் விவகாரத்து கோரி இருந்தார். இதைத்தொடர்ந்து ஆர்த்தி ரவி, தனது instagram பக்கத்தில் தன்னுடைய அனுமதி இல்லாமலேயே, ரவி மோகன் விவாகரத்து செய்யும் முடிவை எடுத்து இருப்பதாகவும், அவரை சந்தித்து பேச வேண்டும் என பதில் அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதன் பின், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவர்களின் மகள் திருமணத்தில் நடிகர் ரவி மோகன் தன்னுடைய தோழி கெனிஷாவுடன் கைகளை கோர்த்தபடி வந்திருந்தார். அது மட்டுமல்லாமல் இருவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்து வந்திருந்தது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக பேசப்பட்டது. பலரும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்று பேசப்பட்டது.

Ravimohan Aarthi kenishaa
Photo Credit:

நடிகர் ரவி மோகன்: இப்படி ஒரு பக்கத்தில் இவர்களின் பஞ்சாயத்து சென்று கொண்டு இருந்த நிலையில், பாடகி கெனிஷா, சொந்த இசையில் "அன்றும் இன்றும்" என்ற ஆல்பம் வீடியோவை கடந்த மாதம் வெளியிட்டு இருந்தார். இது இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், 'அன்றும் இன்றும்' பாடலுக்கான இசை வீடியோவில் பங்கேற்பதற்காக இலங்கை சென்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட போட்டோவை பாடகி கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த போட்டோ தற்போது ரசிகர்கள் மற்றும் ஊடகங்களிடையே வைரலாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்காக நடிகர் ரவி மோகனும் இலங்கை சென்றுள்ளார். அங்கு, ரவி மோகனும், கெனிஷாவும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தை நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த சந்திப்பின்போது, இலங்கையின் கலாச்சாரம், பாரம்பரியம், சுற்றுலா தலங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை மேம்படுத்துவது குறித்து இசை நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படத் தயாரிப்புகள் பற்றி விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

என்ன உறவு: நடிகர் ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் நெருக்கமாக இருப்பது சினிமா வட்டாரத்தில் பேசப்படும் பொருளாக மாறியுள்ளது. இருவரும் இதுவரை தங்கள் உறவு பற்றி வெளிப்படையாக எதையும் அறிவிக்கவில்லை என்றாலும், இசை நிகழ்வுகள், வெளிநாட்டுப் பயணங்கள், கோவிலுக்கு செல்வது என எதுவாக இருந்தாலும் சேர்ந்தே செய்து வருகின்றனர். நடிகர் ரவி மோகன் தற்போது 'ஜினி' திரைப்படத்திலும், கரத்தே பாபு படத்தில் நடித்து முடித்துள்ளார். அதே போல, சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் 'பரசக்தி' திரைப்படத்தில் முதன்முறையாக நெகட்டிவ் ரோலில் நடித்து வருகிறார் ரவி மோகன். மேலும், ரவி மோகன், கார்த்திக் யோகி கூட்டணியில் உருவாக இருக்கும் 'புரோ கோட்' படத்தை ரவிமோகனின் தயாரிப்பு நிறுவனமே தயாரிக்க உள்ளது.

More from Filmibeat

Read more about: aarthi கெனிஷா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X