பாடகர் கேகே மரணத்தில் மர்மம்? பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட உடல்.. பரிதவிப்பில் குடும்பம்!

கொல்கத்தா: மாரடைப்புக்கு காரணமாக உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், பிரபல பாடகர் கேகே மரணத்தில் மர்மம் இருப்பதாக வெளியாகி உள்ள தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

Singer KK Passed Away | மேடையில் பாடி முடித்ததும் பிரிந்த உயிர் | #India

திடீரென இயற்கைக்கு புறம்பாக அவரது மரணம் ஏற்பட்டு இருக்கலாம் என்கிற சந்தேகத்துடன் போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.

53 வயதில் கட்டுக்கோப்பான உடலை கொண்டிருந்த கேகே எனும் கிருஷ்ணகுமார் குன்னாத் எப்படி உயிரிழந்தார் என்பது புரியாத புதிராக உள்ளதாக வரும் தகவல்கள் அவரது ரசிகர்களையும் குடும்பத்தினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

பாடகர் கேகே மரணம்

பாடகர் கேகே மரணம்

கொல்கத்தாவின் நஸ்ரூல் மாஞ்சா நகரில் உள்ள குருதாஸ் கல்லூரியில் நடைபெற்ற இசைக்கச்சேரியில் கலந்து கொண்டு பாடல்களை பாடி ரசிகர்களை சந்தோஷப்படுத்திய பாடகர் கேகே நிகழ்ச்சி முடிந்து தனது அறைக்குச் செல்லும் போது மயங்கி விழுந்ததும் அங்கிருந்தவர்கள் பதறிப் போய் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். CMRI மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிர் பிரிந்து விட்டது எனக் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மர்ம மரணம்

மர்ம மரணம்

மாரடைப்பு ஏற்பட்டு பாடகர் கேகே உயிரிழந்தார் என தகவல்கள் வெளியான நிலையில், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக வெளியாகி உள்ள தகவல்கள் பரபரப்பை கிளப்பி உள்ளது. உடல் நலக் குறைவு இருந்திருந்தால் இசைக் கச்சேரிக்கே வந்திருக்க மாட்டாரே, நன்றாக பாடிக் கொண்டிருந்த நபர் எப்படி இறந்தார் என்கிற கேள்விகளை ரசிகர்களும், அவரது குடும்பத்தினரும் எழுப்பி உள்ளனர்.

போஸ்ட் மார்ட்டம்

போஸ்ட் மார்ட்டம்

இந்நிலையில், அவரது உடல் SSKM மருத்துவமனையில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. பிரேத பரிசோதனைக்குப் பிறகே அவர் உயிரிழந்ததற்கான உண்மையான காரணம் தெரிய வரும் எனக் கூறுகின்றனர். அவரது தலையில் அடிபட்ட காயங்கள் தென்பட்டதை தொடர்ந்து தான் இப்படியொரு சந்தேகம் பூதாகரம் ஆனதாக கூறுகின்றனர்.

நாடு முழுவதும் இரங்கல்

நாடு முழுவதும் இரங்கல்

பிரதமர் மோடி முதல் நாடு முழுவதும் ஏகப்பட்ட அரசியல், சினிமா பிரபலங்கள் மற்றும் அவரது லட்சக் கணக்கான ரசிகர்கள் என பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIPKK எனும் ஹாஷ்டேக்கில் பலரும் அவரது நினைவலைகளை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X