நெஞ்சுவலியுடன் நடந்து வந்த பாடகர் கேகே.. சோகத்தில் ஆழ்த்திய கடைசி நிமிட வீடியோ!

கொல்கத்தா : பாடகர் கேகே நெஞ்சு வலி ஏற்பட்டு அரங்கத்திலிருந்து நடந்தே வந்தே வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

Recommended Video

Singer KK Passed Away | மேடையில் பாடி முடித்ததும் பிரிந்த உயிர் | #India

பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னாத், அவரது ரசிகர்களால், கேகே என அன்போடு அழைக்கப்பட்டு வந்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி கன்னடா, மலையாளம் என இந்தியாவின் முக்கிய மொழித் திரைப்படங்களில் பல பாடல்கள் பாடியுள்ளார்.

பிரபல பாடகர் கேகே

பிரபல பாடகர் கேகே

பிரபல பாடகர் கேகே நேற்று மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் குருதாஸ் நஸ்ரூல் மன்சா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உற்சாகமாக பாடல் பாடிக்கொண்டு இருந்தார். அவர் பாடல் பாடிக்கொண்டு இருக்கும் போதே வியர்வை அதிகமாக வெளியேறி உள்ளது. இதனால், தனது உதவியாளரை அழைத்து அரங்கத்தில் ஏசி சரியாக ஓடவில்லையா... வியர்க்கிறது என்று கூறி கைகுட்டையை வாங்கி முகத்தை துடைத்துள்ளார்.

மயங்கி விழுந்தார்

மேலும், ஏதோ அசௌகரியமாக இருந்ததால், பாடுவதை நிறுத்திவிட்டு, அங்கிருந்தவர்களுக்கு நன்றி கூறிவிட்டு மேடையின் பின்பக்க வழியாக நடந்தே காருக்கு சென்றார். அவர் நடந்தே வந்து காருக்குள் ஏறிய கடைசி நிமிட வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. காருக்குள் ஏறிய கே.கே, இதயம் கனமாக இருப்பதாக கூறிய சில நொடிகளிலேயே மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

சோகத்தில் ரசிகர்கள்

சோகத்தில் ரசிகர்கள்

அதன் பின்னர், விரைந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட கேகேவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர், வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பாடகர் கேகேவின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு என அவரது ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஹிட் பாடல்

ஹிட் பாடல்

1996ம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தான் முதன் முதலில் அவர் திரையில் பாடியுள்ளார். பாடகர் கேகே தனது முதல் மியூசிக் ஆல்பம் "Pal" மூலம் இசை பிரியர்கள் மனதில் இடம் பிடித்தார். அவர், தடப் தடப், தஸ் பஹானே,மாரி எண்ட்ரியான் உட்பட பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். மன்மதன் படத்தில் காதல் வளர்த்தேன், கில்லி அப்படி போடு, நினைத்து நினைத்து போன்ற ஹிட் படங்களை பாடியது கேகேதான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X