“என்ன அவசரம் நண்பா“... பாடகர் கேகே மறைவு... பிரபலங்கள் உருக்கம்!

சென்னை : பிரபல பின்னணி பாடகரான கேகே மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி கன்னடா, மலையாளம், பெங்காலி என இந்தியாவின் முக்கிய மொழித் திரைப்படங்களில் பல பாடல்கள் பாடியுள்ளார்.

Recommended Video

Singer KK மறைவுக்கு இரங்கல் தெரிவித்த UnniKrishnan | Filmibeat Tamil

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் காதல் தேசம் படத்தின் மூலம் அவருக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பை கொடுத்தார்.காதல் தேசம் படத்தில் கல்லூரி சாலை, ஹலோ டாக்டர் ஆகிய பாடல்களை பாடியுள்ளார். தமிழில் ஏராளமான ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

பிரபல பாடகர் கேகே

பிரபல பாடகர் கேகே

பிரபல பாடகர் கேகே நேற்று மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் குருதாஸ் நஸ்ரூல் மன்சா கல்லூரியில் நிகழ்ச்சியில் பாடிக்கொண்டு இருக்கும் போது கேகேவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அவருக்கு வியர்வை அதிர்த்து உடலில் சோர்வு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும், தனது பாடலை கேட்க பல்லாயிரக்கணக்கான மக்கள் ஏமாற்றமடைந்துவிடக்கூடாது என ஒரு சில பாடலை சமாளித்து பாடி உள்ளார்.

மாரடைப்பால் மரணம்

மாரடைப்பால் மரணம்

தொடர்ந்த உடல் சோர்வாக இருந்ததால், நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மாரடைப்பால் உயிரிழந்தார். இவரின் இழப்பு ஒட்டு மொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பல திரைப்பிரபலங்கள் இவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

என்ன அவசரம் நண்பா

என்ன அவசரம் நண்பா

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில், ''அன்புள்ள கேகே" என்ன அவசரம் நண்பா... உங்களைப் போன்ற திறமையான பாடகர்களும் கலைஞர்களும் இந்த வாழ்க்கையை இன்னும் கூடுதலாக தாங்கக் கூடியதாக மாற்றினீர்கள்...'' என உருக்கமாக பதிவிட்டுள்ளார். பதிவிட்டுள்ளார்.

ஆழ்ந்த இரங்கல்

ஆழ்ந்த இரங்கல்

மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், "பன்மொழிகளிலும் பாடி ரசிகர்களை மகிழ்வித்த கேகே எனும் கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பால் அகால மரணம் அடைந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் என் ஆறுதல்கள்" என்று கூறியுள்ளார்.

மக்களால் நேசிக்கப்பட்டார்

மக்களால் நேசிக்கப்பட்டார்

கே.கே.யின் அகால மரணம் குறித்து அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். எனக்காக மறக்க முடியாத பாடல்களைப் பாடினார். அவர் தலைமுறைகள் மற்றும் மொழிகள் கடந்து மக்களால் நேசிக்கப்பட்டவர். அவரை இழந்துவாடும் அவரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

மனம் நொறுங்கிவிட்டது

மனம் நொறுங்கிவிட்டது

சிரஞ்சீவி பதிவிட்டுள்ள டிவிட்டில், கே.கேவின் திடீர் மறைவால் மனம் நொறுங்கிவிட்டது. சீக்கிரம் சென்றுவிட்டார். ஒரு அற்புதமான பாடகர் மற்றும் சிறந்த ஆத்மா. அவர் எனக்காக 'இந்திரா' படத்தில் 'தாயி தாயி தாமா' பாடினார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X