பிணத்து மேல தான் கல்யாணம்.. காதலுக்கு வீட்டுல பயங்கர எதிர்ப்பு.. சங்கீதா கிரிஷ் காதல் கதை!
சென்னை: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை சங்கீதா, உயிர், பிதாமகன், தனம் என பல படத்தில் வித்தியாசமான கேரக்டர் ரோல்களில் நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர். மேலும் இவர் நடித்த, விக்ரம், சூர்யாவுடன் இணைந்து நடித்த பிதாமகன் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்த இவர், பின்னணி பாடகரான கிரிஷ்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில், பாடகர் கிரிஷ், காதல் திருமணம் குறித்து அளித்துள்ள பழைய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பார்த்ததும் காதல்: நடிகை சங்கீதாவை முதலில் விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஒன்றில் தான் பார்த்தேன். விழா முடிந்த பின், அனைவரும் சாப்பிட்டோம். அப்போது, இருவரும் சேர்ந்து சாப்பிட்டோம், சங்கீதாவிற்கு என்னை பார்த்ததும் பிடித்துவிட்டது, என் போன் நம்பரை வாங்க துடித்துக்கொண்டிருந்தார், இது தெரிந்து நான், அங்கிருந்து நான் கிளம்பிவிட்டேன். அப்போது, ராய் லட்சுமிடம் என் நம்பரை வாங்கி போன் செய்தார். அதன் பிறகுதான் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்தோம்.
காதலுக்கு எதிர்ப்பு: அதில், நானும் சங்கீதாவும் காதலிப்பதை முதலில், நான் தான், என் அப்பா அம்மாவிடம் சொன்னேன். அவர்கள் காதலுக்க மிகவும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அம்மா, சினிமாவில் வரும் டயலாக் போல என் பிணத்தின் மேல தான் திருமணம் நடக்கும் என்று சொல்லிவிட்டார். அதன் பிறகு நான், அந்த பெண் எல்லாத்தையும் விட்டு விட்டு என்னிடம் வந்து இருக்கிறாள். நான் அவளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பிடிவாதமாக இருந்தேன். அதேபோல அவளும் எனக்காக காத்திருந்தாள். அப்போது, என் பாட்டி, என் அம்மா,அப்பாவிடம் பேசிய பின் தான், என் அம்மா காதலுக்கு ஓகே சொன்னார்கள். அதன் பிறகுதான் எனக்கும் சங்கீதாவிற்கும் திருமணம் நடைபெற்றது என்று பாடகர் கிரிஷ் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











