நைட் 9 மணிக்கு வாலி சொன்ன வார்த்தை.. வாடா பின்லேடா பாடல் உருவான கதை தெரியுமா?

சென்னை: நடிகர் அஜித்குமாரின் கெரியரில் மிக முக்கியமான திரைப்படமாக அமைந்த திரைப்படம் தான் மங்காத்தா. அஜித்தின் 50 வது திரைப்படமான இப்படத்தில் அஜித் நெகட்டிவ் ரோலில் மிரட்டி இருந்தார். இன்றைய இளசுகளும் இந்த படத்தை கொண்டாடி வரும் நிலையில் இந்த படத்தில் வரும் வாடா பின்லேடா பாடல் எப்படி உருவானது என்று பாடகர் கிரிஷ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

2011 ம் ஆண்டு தியேட்டரில் வெளியான படம் மாங்காதா. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இதில் திரிஷா, அர்ஜுன், லட்சுமி ராய், அஞ்சலி, ஆண்ட்ரியா என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். அஜித் குமார் இந்த திரைப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் படம் முழுக்க தெறிக்க விட்டிருந்தார். இந்த படம் அவருடைய திரை வாழ்க்கையில் ஒரு மிக முக்கியமான திரைப்படமாகவே அமைந்தது.

mankatha singer krish interview

வாடா பின்லேடா பாடல்: இந்த திரைப்படத்தினுடைய பிஜிஎம் இன்று வரைக்கும் ட்ரெண்டிங்கில் உள்ளது. அந்த அளவுக்கு இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா பக்காவாக மியூசிக் போட்டு இருந்தார். இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் இன்றைய தலைமுறை கேட்டு ரசித்து வருகிறார்கள். அந்த வகையில், மங்காத்தா படத்தில் வரும் வாடா பின்லேடா என்ற பாடலில் அஜித்தும் த்ரிஷாவும் கலக்கலாக டான்ஸ் ஆடி இருப்பார்கள். அந்த பாடல் எப்படி உருவானது என பாடகர் க்ரிஷ் ஒரு பேட்டியில் சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

9 மணி வாலி திட்டினார்: அந்த பாடலை வாலி எழுதி இருந்தார். சுசித்ராவும் நானும் சேர்ந்து இந்த பாடலை பாடினோம். அப்ப கடைசி நேரத்துல யுவன் சங்கர் ராஜா, பாடலின் கடைசி சரணம், அஜித் சார் பாடி முடிக்கிற மாதிரி அதாவது ஆண் பாடகர் பாடி முடிக்கிற மாதிரி இருந்தா நல்லா இருக்கும் என்று சொன்னார். உடனே வாலி சாருக்கு போன் பண்ணி, கடைசி சரணத்தை கேளு என்று யுவனும் வெங்கட்டும் தொல்லை செய்தார்கள். நைட் 8 மணிக்கு யாராவது கால் பண்ணாலே வாலி சார் திட்டுவாரு. அப்பவே நைட் 9 மணி ஆயிடுச்சு, சரி வேற வழியே இல்லாததால், நான் கால் பண்னேன், போனை எடுத்த அவரு, என்னய்யா இந்த நேரத்துல போன் பண்ணி இருக்க என்று சத்தம் போட்டாரு. நான் விஷயத்தை சொன்னதும். நான் இப்போ ஹாஸ்பிடல் இருக்கேன், நீ கடைசி சரணத்தை கங்கை அமரனிடம் கேட்டு வாங்கிக்கோ என்று போனை கட் செய்து விட்டார்.

அதன்பிறகு, வெங்கட்பிரபு, அப்பாவிற்கு கால் செய்து, வாலி எழுதிய பாடலை அனுப்பினார். அப்புறம் கங்கை அமரன் அந்த பாடலின் கடைசி சரணத்தை எழுதி கொடுத்தார். ஒரு பாடலில் இரண்டு பாடல் ஆசிரியர்கள் எழுதியது இந்த பாடல் தான் என்று பாடகர் கிரிஷ் இந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X