twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பல நாட்களாக மருத்துவமனையில்... எப்படி இருக்கிறார் லதா மங்கேஷ்கர்

    |

    மும்பை : லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சையளித்துவரும் மும்பை மருத்துவமனை தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    மகாராஷ்டிராவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. கொரோனாவின் கோரப்பிடியில் பல திரைப்பிரபலங்கள் சிக்கி அவதிப்பட்டு வருகிறார்கள்.

    பத்த வைக்க வந்துட்டாருப்பா மொட்டை தாத்தா.. அல்டிமேட் ரெசிபியுடன் பிக் பாஸை அலறவிடப் போறாரு!பத்த வைக்க வந்துட்டாருப்பா மொட்டை தாத்தா.. அல்டிமேட் ரெசிபியுடன் பிக் பாஸை அலறவிடப் போறாரு!

    லதா மங்கேஷ்கர்

    லதா மங்கேஷ்கர்

    திரைத்துறையில் முடிசூடா அரசியாக விளங்குபவர் லதா மங்கேஷ்கர். 1,000 க்கும் மேற்பட்ட ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் பல்வேறு பிராந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். இந்தியா முழுவதும் அல்லாமல் உலகெங்கும் பல்வேறு மொழி பேசும் கோடிக்கணக்கான மக்கள் அவரது ரசிகர்களாக உள்ளனர்.

    மருத்துவமனையில்

    மருத்துவமனையில்

    லதா மங்கேஷ்கருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதால், மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா பரிசோதனையின்போது நிமோனியாவும் இருப்பது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து ஐ.சி.யூவில் இருக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    முன்னேற்றம்

    முன்னேற்றம்

    இந்நிலையில், அவருக்கு சிகிச்சையளித்துவரும் மருத்துவக்குழுவின் தலைவர் பிரதித் சம்தானி வெளியிட்டுள்ள அறிக்கையில், அவருக்கு மூச்சுத்திணறல் இருந்ததால் வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டு இருந்தது, ஆனால் தற்போது வென்டிலேட்டரின் அகற்றப்பட்டு அவர் நலமுடன் இருக்கிறார். இருப்பினும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அவர் இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. மருத்துவர்களின் இந்த தகவலால் அவரது ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர்.

    பல விருதுகள்

    பல விருதுகள்

    இந்தியாவின் மெலடி குயின் என்று அழைக்கப்படும் பாடகர் -- பத்ம பூஷன், பத்ம விபூஷன் மற்றும் தாதா சாகேப் பால்கே விருது மற்றும் பல தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார். வயது மூப்பு காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவரை மருத்துவர்கள் மிகக்கவனமாக கவனித்து வருகின்றனர். அவர் பூரண உடல் நலன் பெற வேண்டும் என்பது கோடிக்கணக்கான அவரது ரசிகர்களின் ஆவலாக உள்ளது.

    English summary
    singer Lata Mangeshkar health updates
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X