அந்த எண்ணம் மட்டும் உங்களுக்கு வேண்டாம்.. தோனிக்கு பிரபல பாடகி உருக்கமான வேண்டுகோள்!

Recommended Video

#DhoniInBillionHearts | CWC 2019 : IND VS NZ | கோடி இதயங்களில் தோனி! உருகும் ரசிகர்கள்- வீடியோ

மும்பை: அந்த எண்ணம் மட்டும் உங்களுக்கு வேண்டாம் என பிரபல பாடகியான லதா மங்கேஷ்கர் மகேந்திர சிங் தோனிக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப்போட்டியில் இந்தியாவும் நியூஸிலாந்தும் மோதின. இதில் பிட்சின் தன்மை மற்றும் நியூசிலாந்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது இந்திய அணி.

தொடக்க ஆட்டக்காரர்கள் மளமளவென ஆட்டமிழக்க அதிர்ச்சியில் உறைந்தனர் இந்திய ரசிகர்கள். இதைத்தொடர்ந்து தோனி மற்றும் ஜடேஜா கூட்டணி நிதானமாக ஆட விறு விறு என ரன் ரேட்டை உயர்த்தியது இந்திய அணி.

தகர்ந்த கனவு

தகர்ந்த கனவு

தோனி களத்தில் இருந்த வரை நிச்சயம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிடும் என்றே ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களும் நம்பியிருந்தனர். ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக தோனி ரன் ரவுட் ஆக, இந்திய அணியின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது.

வைரலான வீடியோ

வைரலான வீடியோ

தோல்வியை சற்றும் எதிர்பாராத தோனி பெவிலியனுக்கு திரும்பும் போதே கதறி அழுதார். தோனி கதறிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவை பார்த்து நெகிழாதா இந்தியர்களே இருக்க முடியாது.

விமர்சனங்கள்

விமர்சனங்கள்

இதைத்தொடர்ந்து தோனி உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு ஓய்வை அறிவித்து விடுவார் என சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே தோனி முன்பு போல் விளையாடுவதில்லை அவர் ஓய்வை அறிவித்துவிட வேண்டும் என விமர்சனங்கள் எழுந்தன.

விவாதம்

விவாதம்

இந்திய அணி வீரர்களும் உலகக்கோப்பையை வாங்கி தோனி கையில் கொடுக்க வேண்டும் என எண்ணினர். ஆனால் எல்லாம் கனவாக போக தோனி ஓய்வை அறிவித்துவிடுவாரா என்ற விவாதம் தொடங்கியுள்ளது.

எதுவும் சொல்லவில்லை

எதுவும் சொல்லவில்லை

தோனியின் ஓய்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த கேப்டன் விராத் கோலி, இதுவரை ஓய்வு குறித்து தோனி எதுவும் கூறவில்லை என்றார். தோனியின் ஓய்வு அறிவிப்பை அவரது ரசிகர்களால் நினைத்து கூட பார்க்கமுடியவில்லை.

தோனிக்கு கோரிக்கை

இந்நிலையில் பாடகி லதா மங்கேஷ்கர் டோனி ஓய்வு பெறுவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.லதா மங்கேஷ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், " வணக்கம் தோனி, சில நாட்களாக நான் கேள்வி படுகிறேன். நீங்கள் ஓய்வு பெறப்போகிறீர்கள் என்று. தயவு செய்து ஓய்வு பற்றி நீங்கள் நினைக்க வேண்டாம். நாட்டுக்கு உங்களோட அர்ப்பணிப்பு மற்றும் விளையாட்டு ரொம்ப முக்கியம். உங்களிடம் என்னுடைய ஒரு அன்பான கோரிக்கை. ஓய்வு குறித்து நீங்கள் யோசிக்க வேண்டாம், அந்த எண்ணம் உங்களுக்கு வர வேண்டாம்" என கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது தோனியின் ரசிகை

தற்போது தோனியின் ரசிகை

கிரிக்கெட் ரசிகையான பாடகி லதா மங்கேஷ்கர் சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகை ஆவார். தற்போது தோனியையும் அவர் மனதார நேசிக்க தொடங்கிவிட்டார் என்பது அவரது இந்த டிவிட்டிலேயே தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X