எஸ்.பி.பிக்கு கொரோனா பரவ நான் காரணமா..? டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல பாடகி போலீஸில் புகார்!

By

சென்னை: பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு தான் காரணமல்ல என்று பிரபல நடிகை விளக்கம் அளித்துள்ளார்.

Recommended Video

Master Team special Wishes to Thalapathy Vijay | Malavika Mohanan, Anirudh

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை கூறப்படுகிறது.

கூட்டுப் பிரார்த்தனை

கூட்டுப் பிரார்த்தனை

அவருக்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, அவர் உடல் நலம்பெற, நேற்று மாலை 6 மணிக்கு நடிகர், நடிகைள் பங்கேற்கும் கூட்டுப் பிரார்த்தனைக்கு அறிவிக்கப்பட்டது. அதன்படி, நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்கள், ரசிகர்கள் அவரவர் வீட்டில் இருந்த படி எஸ்.பி.பி பாடிய பாடல்களை ஒலிக்கவிட்டு பிரார்த்தனை செய்தனர். பாரதிராஜா தலைமையில், சரோஜாதேவி, பிரபு, அமீர், வெற்றிமாறன், தங்கர் பச்சான், பார்த்திபன், சேரன் உள்பட பலர் பிரார்த்தனை செய்தனர்.

பாடகி மாளவிகா

பாடகி மாளவிகா

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் பின்னணி பாடகி மாளவிகாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடகி சுனிதாவுக்கும் இந்தத் தொற்று உறுதியானது. இதனால், மாளவிகா கலந்து கொண்ட இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலசுப்ரமணியனும் கலந்துகொண்டிருந்தார் என்றும் மாளவிகா மூலமாகவே கொரோனா தொற்று எஸ்.பி.பிக்கு பரவியது என்றும் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் செய்தி பரவியது.

எஸ்.பி.பி நிகழ்ச்சி

எஸ்.பி.பி நிகழ்ச்சி

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பாடகி மாளவிகா, இதற்கு தனது பேஸ்புக்கில் மறுப்புத் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பிரபல பாடகர்களுடன் எஸ்.பி.பி கலந்துகொண்ட டிவி நிகழ்ச்சி படப்பிடிப்பு, ஜூலை 30 மற்றும் 31 அன்று நடந்தது. இரண்டாவது நாளில் 4 பாடகிகளில் நானும் ஒருவராகக் கலந்து கொண்டேன். எனக்குத் தொற்று ஏற்பட்டிருந்தால் என் மூலம் மற்ற பாடகர்களுக்கும், மேக்கப் ரூமில் இருந்தவர்களுக்கும் பரவி இருக்க வேண்டும்.

கொரோனா சோதனை

கொரோனா சோதனை

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாருக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இன்னும் சிலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் நானும் 8 ஆம் தேதி கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். எனக்கும் என் பெற்றோருக்கும், என் குழந்தைக்கும் கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டது. ஆனால் என் கணவர் மற்றும் டிரைவருக்கு இல்லை.

சைபர் கிரைம்

சைபர் கிரைம்

அதற்கு நான் தனிமை சிகிச்சை எடுத்துக்கொண்டேன். என் தந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதான் நடந்தது. தேவையில்லாமல் போலிச் செய்திகளை பரப்ப வேண்டாம். வாட்ஸ் அப்பிலும் சமூக வலைதளங்களிலும் பொய்யாக வதந்தி பரப்புகிறவர்கள் மீது, சைபர் கிரைம் போலீஸில் புகார் செய்துள்ளேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X