தில் முதல் கர்ணன் வரை... மாணிக்க விநாயகம் பாடிய பாடல்கள் முழு விபரம்

சென்னை : நடிகரும் பிரபல பின்னணி பாடகருமான மாணிக்க விநாயகம் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். விக்ரம், தனுஷ், சூர்யா, விஜய், ஜெயம் ரவி உள்ளிட்ட டாப் நடிகர்களின் படங்களில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியவர் மாணிக்க விநாயகம்.

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்த மாணிக்க விநாயகம், பிரபலமான கலை குடும்பத்தை சேர்ந்தவர். கணீர் என்ற குரலால் தனது பாடல்கள் மற்றும் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் மாணிக்க விநாயகம்.

Singer Mannika Vinayagam songs list

மாணிக்க விநாயகம் பாடிய பாடல்கள்

மாணிக்க விநாயகம் தமிழ் சினிமாவில் கிட்டதட்ட 800 பாடல்களை பாடி உள்ளார். இது தவிர பக்தி பாடல் ஆல்பங்கள், கிராமி இசை ஆல்பங்கள் என 15,000 தனிப்பாடல்கள் பாடி வெளியிட்டுள்ளார். இவரின் ஐயப்ப பக்தி பாடல்கள் மிகவும் பிரபலம். சினிமாவில் கடைசியாக தனுஷ் நடித்த கர்ணன் படத்தில் மஞ்சநத்தி பாடலை பாடினார்.

மாணிக்க விநாயகத்தின் ஹிட் பாடல்கள்

கண்ணுக்குள்ள கெளுத்தி - தில்

ஏல இமயமலை - தவசி

விடை கொடு - கன்னத்தில் முத்தமிட்டால்

அர்ஜுனரு வில்லு - கில்லி

வண்டி வண்டி - ஜெயம்

அருவா மீசை - தூள்

சின்ன வீடா வரட்டுமா - ஒற்றன்

காதல் வந்தால் சொல்லி அனுப்பு - இயற்கை

புண்ணாக்குன்னு சொன்னா - அருள்

கொக்கு பற பற - சந்திரமுகி

கட்டு கட்டு கீர கட்டு - திருப்பாச்சி

அய்யய்யோ - பருத்தி வீரன்

நானே இந்திரன் - சிங்கம்

தேரடி வீதியில் - ரன்

மன்னார்குடி கலகலக்க - சிவப்பதிகாரம்

சுப்பம்மா சுப்பம்மா - ரோஜா கூட்டம்

தனுஷிற்கு அப்பா

திருடா திருடி படத்தில் தனுஷிற்கு அப்பாவாக மிக அழகான, இயல்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த மாணிக்க விநாயகம், மீண்டும் தனுஷ் நடித்த அசுரன் படத்திற்காக ஒரு பாடலை பாடினார். ஹீரோக்கள் பலருக்கு அப்பாவாக கேரக்டர் ரோல்களில் நடித்து பிரபலமானார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X