எஸ்பிபியின் உடலை பார்த்து குழந்தையை போல் தேம்பி தேம்பி அழுத பாடகர் மனோ!
சென்னை: பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் புகழ் உடலை பார்த்து பாடகர் மனோ கதறி அழுதது காண்போரை கலங்கச் செய்தது.
Recommended Video
மாய குரலோன் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் மறைவு நாடு முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள எஸ்பிபியின் ரசிகர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஒரு இசை சகாப்தமே முடிந்துவிட்டது என உருக்கமாக கூறி வருகின்றனர்.

பிரபலங்கள் நேரில் அஞ்சலி
மறைந்த எஸ்பி பாலசுப்ரமணியத்தின் உடல் செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு காவல்துறை மரியாதையுடன நல் அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் அஞ்சலி செலுத்தினர்.

கதறி அழுத மனோ
தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் உள்ள எஸ்பி பாலசுப்ரமணியத்தின் உடலுக்கு அவரது நண்பரும் பாடகருமான மனோ நேரில் அஞ்சலி செலுத்தினார். நெஞ்சில் அடித்துக்கொண்டப் படியே கண்ணீர் விட்டு கதறினார் மனோ. குழந்தையை போல் தேம்பி தேம்பி அழுத அவரை இசையமைப்பாளர் தீனா, அணைத்தப்படி ஆசுவாசப்படுத்தினார்.

பாரதிராஜா, தேவி ஸ்ரீபிரசாத்
மேலும் இயக்குநர் பாரதிராஜா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் ஆகியோரும் எஸ்பிபியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதேபோல் எஸ்பிபியின் உடலுக்கு இயக்குநரும் நடிகருமான அமீரும் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
நடிகர்கள் விஜய், அர்ஜூன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

ரசிகர்கள் அஞ்சலி
திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரியும் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். ஆந்திர அரசின் சார்பிலும் மறைந்த எஸ்பிபியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதோடு ரசிகர்களும் வரிசையில் காத்திருந்து எஸ்பிபியின் உடலுலக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.


Click it and Unblock the Notifications











