3 வருடங்களுக்கு முன்பே..வெளிநாட்டு தொழிலதிபருடன் பிரபல பாடகி ரகசிய திருமணம்..கன்னாபின்னா காதலாமே!
சென்னை: தனது வெளிநாட்டு காதலரை ரகசியமாக திருமணம் செய்துகொண்டேன் என்று கூறியுள்ளார், பிரபல பாடகி.
பிரபல பின்னணி பாடகி, மோனாலி தாகூர். இவர் தமிழில் மதயானைக்கூட்டம் படத்தில், யாரோ யாரோ பாடலை பாடியுள்ளார்.
ராதாமோகன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு நடித்த 60 வயது மாநிறம் படத்தில், இளையராஜா இசையில், நாளும் நாளும் என்ற பாடலையும் பாடியுள்ளார்.

வெளிநாட்டு காதலர்
இந்தியில் ஆமிர்கானின் பிகே, லட்சுமி உட்பட சில படங்களில் நடித்துள்ள இவர், பல பெங்காலி மற்றும் இந்தி பாடல்களை பாடியுள்ளார். ஏராளமான இந்தி டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். தனி ஆல்பங்களிலும் பாடியிருக்கிறார். இவர், தனது வெளிநாட்டு காதலரை மூன்று வருடத்துக்கு முன்பே ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.

திருமணம் செய்தோம்
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த மைக் ரிச்டரை (Maik Richter) சில வருடங்களாகக் காதலித்து வந்தேன். இவர் அங்கு ரெஸ்டாரன்ட் வைத்திருக்கிறார். நாங்கள் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டோம். இது வழக்கமான திருமணம் இல்லை என்பதால், அதை ரகசியமாக வைத்திருந்தோம்.

திருமண வரவேற்பு
என் நண்பர்கள் உள்ளிட்ட பலருக்கும் இந்த திருமண செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தும். சிலர் என் மீது கோபமாக இருப்பார்கள். திருமண வரவேற்பை இன்னும் நடத்தவில்லை. நாட்கள் கடந்து கடந்து 3 வருடம் ஆகிவிட்டன. திருமண வரவேற்புக்கு அவர்களை அழைக்கும்போது கோபப்படமாட்டார்கள். ஆனால், அந்த தேதி எப்போது என்று நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை' என்று தெரிவித்துள்ளார்.

காதலைச் சொன்னார்
தனது கணவரை சந்தித்தது பற்றி கூறியுள்ள அவர், ஸ்விட்சர்லாந்து சென்றிருந்தபோது மைக்கை சந்தித்தேன். அவருடன் மட்டுமல்ல, அவர் குடும்பத்தினருடனும் தொடர்பு ஏற்பட்டது. 2016 ஆம் ஆன்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது, நாங்கள் முதன்முதலாக சந்தித்த ஒரு மரத்தின் அடியில் நின்று, என்னிடம் காதலைச் சொன்னார் மைக். நான் ஏற்றுக்கொண்டேன் இவ்வாறு கூறியுள்ளார். இவர்கள் இருவரும் இப்போது இந்த குவாரன்டைன் நேரத்தில் நியூசிலாந்தில் ஒன்றாக இருக்கின்றனர்


Click it and Unblock the Notifications











