twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சென்னையில் இசைப்பள்ளி தொடங்கிய பாடகி!

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பின்னணி இசைப் பாடகி நமீதா பாபு. தற்போது அவர் இளம் பாடகிகளை உருவாக்கும் வகையில் சென்னையில் ஒரு இசைப் பள்ளியைத் தொடங்கி உள்ளார்.

    'சண்டிவீரன்' படத்தில் இடம்பெற்ற 'அலுங்குறேன் குலுங்குறேன்...' பாடல் மூலம் திரையிசையில் அடியெடுத்து வைத்த நமீதா அதன் பிறகு 'திருநாள்', 'மகளிர் மட்டும்', 'வீரய்யன்', 'தீரன் அதிகாரம் ஒன்று' உள்ளிட்ட பல படங்களில் பாடியுள்ளார்.

    Singer namitha babu starts music school
    தற்போது, இசைப்பள்ளியைத் தொடங்கியிருக்கும் நமீதா, அதைப் பற்றிக் கூறியிருப்பதாவது, "அருமையான பாடல்களைத் தொடர்ந்து பாட விரும்புகிறேன். சிறந்த பின்னணி பாடகியாகவேண்டும் என நான் போட்டுக் கொண்டிருக்கும் உழைப்பு என்னை நிச்சயம் உயர்த்தும் என நம்புகிறேன்.

    வெஸ்டர்ன் க்ளாசிக்கலில் முறையாக பயிற்சி பெற்றுத் தேர்ந்துள்ளதால் எல்லா வகையான பாடல்களையும் என்னால் பாட முடியும். நிறைய இசையமைப்பாளர்களோடு இணைந்து பல அருமையான , ஹிட் பாடல்களை பாட ஆவலோடு உள்ளேன் .

    நல்ல பாடகிகளை உருவாக்க இன்ஸ்பயர் ஸ்கூல் ஆஃப் மியூசிக் என்ற பெயரில் என்ற இசை பள்ளியைத் துவக்கி இருக்கிறேன். இசையமைப்பாளர்கள் ஜிப்ரான், ஸ்ரீகாந்த் தேவா மற்றும் எஸ்.என். அருணகிரி ஆகியோர் திறந்து வைத்தனர். எனக் கூறியிருக்கிறார் நமீதா பாபு.

    English summary
    Namitha Babu is an upcoming playback singer in Tamil cinema. Namitha babu made her debut in the song 'Alunguren Kulunguren ...' from the movie 'Chandiveeran' and then sung in several films including 'Thirunaal', 'Magalir mattum', 'Veerayyan', 'Theeran adigaaram ondru'. She is now starts a music school in Chennai to create young singers.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X