பிரபல பாடகி கர்ப்பம்.. உள்ளே இருக்கும் பாப்பாவுக்கு முத்தம் கொடுக்கும் ஹப்பி.. தெறிக்கும் பிக்ஸ்!

மும்பை: பிரபல பாடகியான நீத்தி மோகன் பேபி பம்ப்புடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ளார்.

பிரபல பாடகியான நீத்தி மோகன் டெல்லியை பூர்விகமாக கொண்டவர்.

மராத்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு, பஞ்சாபி, பெங்காலி என பல மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.

காந்த கண்ணழகி..

காந்த கண்ணழகி..

ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார் நீத்தி மோகன். தமிழில் ஐ படத்தில் இடம்பெற்ற மெர்சலாயிட்டேன், நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற நீயும் நானும், நம்ம வீட்டுப்பிளளை படத்தில் இடம்பெற்ற காந்த கண்ணழகி உள்ளிட்ட பாடல்களை பாடியுள்ளார்.

திருமண நாள்

திருமண நாள்

இந்நிலையில் நீத்தி மோகன் கர்ப்பமாக இருப்பதை சமூக வலைதளங்கள் மூலம் அறிவித்துள்ளார். 41 வயதான நீத்தி மோகன் கடந்த 2019ஆம் ஆண்டு நிகார் பாண்டியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நேற்று முன்தினம் தங்களின் இரண்டாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினர்.

பேபி பம்ப்புடன்..

பேபி பம்ப்புடன்..

இதனை முன்னிட்டு நீத்தி மோகன் தான் கர்ப்பமாய் இருப்பதை தனது சமூக வலைதள பக்கத்தில் போட்டோக்களை ஷேர் செய்து அறிவித்துள்ளார். நீத்தி மோகன் தன்னுடைய பேபி பம்ப்புடன் கணவருடன் சேர்ந்து எடுத்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

பேபி பம்ப்பில் முத்தம்

பேபி பம்ப்பில் முத்தம்

அதில் நீத்தி மோகனும் அவரது கணவரும் மூன்று பேராக உள்ளதை குறிப்பிடும் வகையில் மூன்று விரல்களை காட்டியுள்ளனர். மேலும் நீத்தியின் பேபி பம்ப்பில் அவரது கணவர் முத்தம் கொடுக்கும் போட்டோவையும் ஷேர் செய்துள்ளார் நீத்தி மோகன்.

கணவருக்கு வாழ்த்து

கணவருக்கு வாழ்த்து

மேலும் அந்த போட்டோக்களுக்கு 1+1 = 3 என்றும் அம்மா இருக்க வேண்டும் அப்பா இருக்க வேண்டும், எங்கள் இரண்டாவது திருமண நாளை விட அறிவிக்க என்ன சிறந்த நாள்!! என்றும் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த பிரபலங்கள் பலரும் நீத்தி மோகன் மற்றும் அவரது கணவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X