கசப்பில் முடிந்தது காதல்.. பாடகரை திருமணம் செய்த பிரபல நடிகை விவாகரத்து.. திரையுலகில் பரபரப்பு

By

ஐதராபாத்: பாடகரை காதலித்து திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை இப்போது விவாகரத்து செய்துள்ளார்.

Recommended Video

கிளாமர் காட்டி தெறிக்க விட்ட ஏமி ஜாக்சன் - வைரல் வீடியோ

பிரபல நடிகை எஸ்தர் நோரன்ஹா. மங்களூரைச் சேர்ந்த இவர், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து வருகிறார்.

தமிழில், பிரபு, ஜெயராம் நடித்த மீன் குழம்பும் மண்பானையும் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள அவர், மேலும் சில படங்களில் நடிக்க இருக்கிறார்.

இந்தியில் அறிமுகம்

இந்தியில் அறிமுகம்

இந்தியில் சரோஜ்கான் இயக்கிய பரோமாஸ் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான எஸ்தர், தொடர்ந்து குயாமத் ஹே குயாமத் படத்தில் நடித்தார். தேஜா இயக்கிய 1000 அப்பாடுலு என்ற படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். பிறகு சுனிலின் பிமாவரம் புல்லுடு என்ற படத்தில் நடித்தார். கன்னடப் படத்திலும் நடித்துவரும் இவர், கடந்த சில வருடங்களாக எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.

பின்னணி பாடகர்

பின்னணி பாடகர்

எஸ்தர் நோரன்ஹா சிறந்த பாடகியும் கூட. இவர் சில படங்களில் பின்னணி பாடல்கள் பாடியுள்ளார். கொங்கனி படங்களில் பாடியுள்ள அவர், ஏராளமான மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். வெளிநாட்டு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். இவர் பின்னணி பாடகர் நோயல் சீன் என்பவரை கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தார்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

நோயல் சீன், பல தெலுங்கு படங்களில் பாடல்கள் பாடி இருக்கிறார். ராப் பாடகரான இவர் தமிழில் இஞ்சி இடுப்பழகி படத்திலும், காதல்னா சும்மா இல்லை படத்திலும் பாடி இருக்கிறார். இவர்கள் காதலுக்கு இரு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது.

இசை ஆல்பங்கள்

இசை ஆல்பங்கள்

சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணத்துக்குப் பின் இருவரும் இணைந்து இசை ஆல்பங்களில் பங்கேற்று வந்தனர். இந்நிலையில், இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. திருமணமான சில மாதங்களிலேயே இருவரும் பிரிந்து விட்டதாகச் செய்திகள் வெளியாயின. ஆனால் இது பற்றி இருவரும் ஏதும் தெரிவிக்கவில்லை.

கனவு நனவாகட்டும்

கனவு நனவாகட்டும்

இந்நிலையில், தாங்கள் விவாகரத்து பெற்றுவிட்டதாக சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார் நோயல். 'அதிகாரபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம். பொதுவெளியில் அறிவிக்க நீதிமன்ற முடிவுக்காக காத்திருந்தோம். எஸ்தருக்கு சிறந்த வாழ்க்கை அமையும் அவர் கனவு நனவாகவும் வாழ்த்துகிறேன். கடவுள் அருள் புரியட்டும் என்று கூறியுள்ளார். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X