அவர் எப்படி இருக்கார்? அந்த நடிகரைப் பற்றி கேள்விக் கேட்ட நெட்டிசன்ஸ்.. நச் பதிலடி கொடுத்த பிரபலம்!
சென்னை: பிரபல நடிகர் குறித்து கேள்வி கேட்ட நெட்டிசனுக்கு பிரபல இளம் பாடகி கூலாக பதிலடி கொடுத்துள்ளார்.
சூப்பர் சிங்கர் தொலைக்காட்சியில் பங்கேற்று புகழ் பெற்றவர் பாடகி பிரகதி. 2012-ல் பாலா இயக்கிய பரதேசி படத்தில் இரு பாடல்கள் பாடி மேலும் கவனம் பெற்றார்.
ராட்சசன், கண்ணே கலைமானே படங்களிலும் பாடியுள்ளார். இவருக்கும் நடிகர் அசோக் செல்வனுக்கும் காதல் என கிசுகிசுக்கள் பரவின.

20 வயசுதான்
ஆனால் இதனை மறுத்த நடிகை பிரகதி இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டு தெளிவு படுத்தினார். நான் திருமணம் செய்து கொள்ளும் எந்த உறவிலும் இல்லை. எனக்கு 20 வயசுதான் ஆகிறது. என்னுடைய எதிர்காலத்தில் கவனம் செலுத்தி வருகிறேன்.

சரக்குடன் போஸ்
நான் ஒரு கல்லூரி மாணவி, திருமணம் செய்து கொள்ளும் நிலைக்கு இன்னும் செல்லவில்லை என்று கூறினார். தொடர்ந்து மாடலிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார் பிரகதி. அவர் கையில் சரக்குடன் போஸ் கொடுத்த போட்டோ அண்மையில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அசோக் செல்வன்
இந்நிலையில் பாடகி பிரகதி ரசிகர்களுடன் சாட் செய்தார். அப்போது ஒரு ரசிகர், அவருடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகர் அசோக் செல்வன் குறித்து கேள்வி எழுப்பினார். அதாவது அசோக் செல்வன் எப்படி இருக்கிறார் என்று கேட்டார் அந்த நெட்டிசன்.

ஸ்க்ரீன் ஷாட்
அதற்கு பதிலளித்த பிரகதி, அதை அவரிடம் தான் கேட்க வேண்டும் என கூலாக பதில் கூறியுள்ளார். ரசிகரின் கேள்வியும் பிரகதியின் பதிலும் அடங்கிய ஸ்க்ரீன் ஷாட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











