நம்ப வேண்டாம்.. மது போதைக்கு நான் அடிமையாகி விட்டேனா..? பிரபல சூப்பர் சிங்கர் பாடகி ஆவேசம்!

By

சென்னை: போதைக்கு அடிமையாகி விட்டதாக வந்த செய்திக்கு ஆவேசமாக கருத்துத் தெரிவித்துள்ளார் பிரபல பாடகி.

Recommended Video

Aranmanai Kili Pragati WOW dance performance • Maina Nandhini, khushbu, Bhavana

பிரபல பின்னணி பாடகி பிரகதி குருபிரசாத். இவர் தமிழில் பல படங்களில் பின்னணி பாடல்கள் பாடியுள்ளார்.

பாலாவின் பரதேசி, வணக்கம் சென்னை, தீரன் அதிகாரம் ஒன்று, ராட்சசன் உள்பட பல படங்களில் பாடி இருக்கிறார்.

சினிமா வாய்ப்பு

சினிமா வாய்ப்பு

சிங்கப்பூரில் பிறந்தவரான இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஏர்டெல் சூப்பர் சிங்கர் சீசன் -3 ல் பங்கேற்ற பின் சினிமாவில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து படங்களில் பாடி வரும் இவர், பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் நடிகையாக அறிமுகமாக இருந்தார். சில காரணங்களால் அதில் அவர் நடிக்கவில்லை.

விளம்பர படங்கள்

விளம்பர படங்கள்

சமுக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பாடகி பிரகதி, அடிக்கடி தனது புகைப் படங்களை பதிவிட்டு வருகிறார். விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். 'சிலர் விரும்பி வந்து கேட்பதால் விளம்பர படங்களில் நடிக்கிறேன், அது எனக்கு விருப்பமானதாக இருக்கிறது என்று இதுபற்றி முன்னர் அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

ஆம்பளை சட்டை

ஆம்பளை சட்டை

விளம்பரங்களுக்கான சில போட்டோஷூட்களிலும் அவர் கலந்து கொண்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன், விளம்பர படம் ஒன்றில் நடித்த ஸ்டில் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் வெறும் ஆம்பளை சட்டை மட்டும் அணிந்து, பேன்ட் அணியாமல், கடற்கரையில் நடந்து செல்வது போன்ற புகைப்படம் அது.

போதைக்கு அடிமை

போதைக்கு அடிமை

இதை ஏராளமான ரசிகர்கள் லைக் செய்திருந்தனர். பலர் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து இருந்தனர். இந்தப் புகைப்படம் வைரலானது. இந்நிலையில், அவர் குடிபோதைக்கு அடிமை யாகி விட்டார் என்றும் மாடலிங் என்ற பெயரில் உடலை காண்பித்தபடி ஆண்களுடன் சுற்றி வருவதாகவும் பணத்துக்காக இப்படி செய்துவருவதாகவும் இணையதளம் ஒன்று எழுதி இருந்தது.

நம்பிவிட வேண்டாம்

நம்பிவிட வேண்டாம்

இதுபற்றி சிலர் அவர் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து அதற்கு கருத்து கூறியுள்ள அவர், இன்டர்நெட்டில் வரும் அனைத்தையும் நம்பி விட வேண்டாம். தவறாக எழுதியுள்ளனர். அந்த லிங்கை எனக்கு அனுப்பி, புகார் அளிக்கவும் வழக்குத் தொடுக்கவும் கூறியிருக்கிறீர்கள். இது அதற்கு தகுதியானது அல்ல என்று கூறியுள்ளார் பாடகி பிரகதி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X