பாலா படத்தில் நடிகையாக அறிமுகமாகும் பாடகி பிரகதி
சூப்பர் சிங்கரில் வெற்றி பெற்ற பாடகி குருபிரசாத், பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் நடிகையாக அறிமுகமாவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வளர்ந்து வரும் பின்னணி பாடகி பிரகதி குருபிரசாத். சிங்கப்பூரில் பிறந்த இவர் இப்போது வசிப்பது கலிபோர்னியாவில். சூப்பர் சிங்கர் போட்டியில் வென்று பாடகியானார்.

பரதேசியில் பாடல்
பரதேசி படத்தில் ஜி.பி.பிரகாஷ் இசையில் அவரை பாடகியாக அறிமுகப்படுத்தினார் பாலா. செங்காடே, ஒர் மிருகம் பாடல்களை பாடினார் பிரகதி.

இசை ஆல்பங்கள்
அதன் பிறகு ஒசாக்கா என்ற பாடலை வணக்கம் சென்னை படத்தில் பாடினார். இதுதவிர தனி ஆல்பங்களில் பாடி வருகிறார்.

தாரை தப்பட்டை
தற்போது பிரகதி நடிகையாகிறார். பாலா இயக்கும் தாரை தப்பட்டை படத்தில் நாதஸ்வர கலைஞராக வரும் சசிகுமாரின் தங்கை ஒரு நாட்டுப்புற பாடகி. அந்த கேரக்டருக்கு பாலா பிரகதியை தேர்வு செய்துள்ளார்.

பாடகி நடிகையாகிறார்
தற்போது பிரகதி நடிப்பு பயிற்சியும், நடிக்க போகும் கேரக்டருக்கான ஒத்திகையும் செய்து வருகிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு பாடகி நடிகையாகி இருக்கிறார்.

மகிழ்ச்சி தெரிவித்த பிரகதி
இந்தத் தகவலை பிரகதி தனது ஃபேஸ்புக், டுவிட்டர் பக்கங்களில் பகிர்ந்துள்ளார். ஒரு பாடகியாக இருந்த நான் நடிகையாக என்னுடைய பயணத்தை இயக்குநர் பாலாவின் படத்தில் தொடங்குகிறேன். ஆதரவு கொடுத்து ஆசி வழங்குங்கள் என்று மகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார் பிரகதி.


Click it and Unblock the Notifications











