Singer Rajalakshmi: அது என் இஷ்டம்.. அந்த உடையில் அதிக வீடியோக்களை பதிவிட்ட சிங்கர் ராஜலட்சுமி!
சென்னை: விஜய் டிவி மூலம் பிரபலமான பாடகி ராஜலட்சுமி. சேனலின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று அதன்மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த இவர், படங்களிலும் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வருகிறார். இதனிடையே தற்போது சினிமாவில் நாயகியாகவும் என்ட்ரி கொடுக்கவுள்ளார். இவரது நடிப்பில் லைசென்ஸ் என்ற படம் உருவாகியுள்ளது. விரைவில் இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்த பாடல்களை பாடிவரும் ராஜலட்சுமி, நடிப்பிலும் கவனம் செலுத்தவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நடிப்பு, பாடகர் என சிறப்பாக செயல்பட்டுவரும் ராஜலட்சுமி தன்னுடைய கணவர் செந்திலுடன் இணைந்து இசைக் கச்சேரிகளிலும் பங்கேற்று வருகிறார். சர்வதேச அளவில் இவரது இசைக்கச்சேரிகள் நடந்து வருகின்றன. இதனிடையே சமீபத்தில் வெளிநாடு சென்ற ராஜலட்சுமி பகிர்ந்த வீடியோக்கள் தற்போது விமர்சனங்களை உண்டு செய்துள்ளன. அவர் அணிந்திருந்த உடை மற்றும் அவர் பேசிய ஆங்கிலத்தை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்தனர். இதனால் கடுப்பான ராஜலட்சுமி இந்த விமர்சனங்களுக்கு தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.

செந்தில் -ராஜலட்சுமி தம்பதி: விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகள் திறமையான பல கலைஞர்களை வெளியுலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டி வருகிறது. இந்த சேனலில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான பாடகர்கள் திரைத்துறையில் அறிமுகமாகி வருகின்றனர். அந்த வகையில் நாட்டுப்புறப்பாடகர்களான செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி தம்பதியினர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டு பாடல்களை பாடி தங்களது திறமையால் சினிமாவில் அதிகமாக பாடும் வாய்ப்பை பெற்றனர். இதன் மூலம் இவர்கள் இருவரும் தங்களை சரியான பாதையில் முன்னேற்றி வருகின்றனர்.
பாடகி ராஜலட்சுமி: பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் 2 படத்தில் சின்ன மச்சான் பாடலை பாடி ராஜலட்சுமி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தார். மேலும் புஷ்பா படத்திலும் சாமி பாடலை பாடி மிகப்பெரிய ஹைட்டை இவர் அடைந்துள்ளார். சினிமாவில் இவர்கள் அடுத்தடுத்து வாய்ப்புகளை பெற்று வரும் நிலையில் சென்னையிலேயே சொந்தமாக வீடு, கார் எல்லாம் வாங்கி செட்டில் ஆகியுள்ளனர். மேலும் நடிப்பிலும் ராஜலஷ்மி தற்போது கவனம் செலுத்தி வருகிறார். முன்னதாக செந்தில் ஹீரோவாக கரிமுகன் என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் சொதப்பலாக அமைந்தது.
நாயகியாக ராஜலட்சுமி என்ட்ரி: இந்நிலையில் தற்போது ராஜலட்சுமி லைசன்ஸ் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த ரசிகர்கள், நயன்தாராவின் அறம் லுக்கை போல ராஜலட்சுமியும் கெத்து காட்டியுள்ளதாக தெரிவித்திருந்தனர். இதனிடையே நடிப்பு மற்றும் பாடல்கள் இவற்றை தாண்டி இசைக்கச்சேரிகளிலும் இவர்கள் இருவரும் அதிக அளவில் பங்கேற்று வருகின்றனர். இந்தியாவில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் இவர்களது இசைக்கச்சேரிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் வெளிநாட்டில் ஒரு இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஜலஷ்மி இது தொடர்பான வீடியோக்களை பகிர்ந்திருந்தார்.
உடை குறித்த விமர்சனம்: அங்கு வசிக்கும் ஒரு நபருடன் அவர் ஆங்கிலத்தில் பேசினார். மேலும் மாடர்ன் உடையில் வீடியோக்களை வெளியிட்டிருந்தார். இந்த விஷயம் சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியிருந்தன. இதனிடையே, இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள ராஜலட்சுமி ஆங்கிலத்தை பேசுவது தனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என்றும் நமக்குள்ளேயே பேசினால் தவறுகள் தெரியாது, அதனால் ஆங்கிலத்தில் மற்றவர்களுடன் பேசி அதன் வீடியோக்களை பதிவிட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
ராஜலட்சுமி பதிலடி: மேலும் தன்னுடைய உடைகள் குறித்து விமர்சனத்தை சுட்டிக்காட்டியுள்ள ராஜலட்சுமி, அடிப்படை அறிவு இல்லாதவர்கள் தான் இப்படி மற்றவர்களின் சொந்த விஷயங்களை விமர்சிப்பார்கள் என்றும் எனக்கு எது சரியாக இருக்கிறதோ அதை நான் செய்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு சுய ஒழுக்கம் உள்ளது என்றும் அதை தான் கடைப்பிடிப்பேன் என்றும் ராஜலட்சுமி தற்போது விளக்கம் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து மாடர்ன் உடைகளில் அதிகமான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications











