Rajalakshmi: கேவலமாக இல்லையா.. விஷ்ணுகாந்த் -சம்யுக்தா விவகாரத்தில் பாடகி ராஜலட்சுமி கிழி!
சென்னை: பிரபல சீரியலில் நடித்தபோது காதல் வசப்பட்டு, 7 மாதங்கள் தொடர்ந்து காதலித்த விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர்.
கடந்த மார்ச் மாதத்தில் இவர்கள் இருவரும் திருமணம் செய்த நிலையில் 15 நாட்களிலேயே மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.
இந்நிலையில் மற்றவர்களின் விமர்சனங்களை மீறி, இவர்கள் இருவரும் மாறி, மாறி தங்களை குற்றம் சாட்டிக் கொள்கின்றனர்.

விஷ்ணுகாந்த் -சம்யுக்தா விவகாரம் குறித்து கேள்வி கேட்ட ராஜலட்சுமி: பிரபல சேனலின் சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் இணைந்து நடித்த விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா இருவரும் தொடர்ந்து சில மாதங்கள் காதலித்து வந்தனர். இதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதத்தில் இவர்களது திருமணம் நடைபெற்றது. எவ்வளவு சீக்கிரத்தில் திருமணம் நடந்ததோ அதே அவசரத்தில் இவர்களது பிரிவும் நிகழ்ந்தது. திருமணமாகி 15 நாட்களில் இவர்கள் இருவரிடையே மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்தனர்.
இதையடுத்து இவர்கள் தங்களது பிரச்சினையை மீடியாவில் பகிரங்கமாக பேசினர். விஷ்ணுகாந்த் ஒரு காம காட்டேரி என்று சம்யுக்தா ஒரு பக்கம் இன்ஸ்டாகிராம் வீடியோவில் பேச, தானா காம காட்டேரி என்று சம்யுக்தாவின் பப்பி லவ் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார் விஷ்ணுகாந்த். மேலும் அவருக்கு பலருடன் தொடர்பு உள்ளதாகவும் அதற்கான வீடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும் தாங்கள் காதலித்ததில் இருந்து திருமணம் வரையில் தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்த பல புகைப்படங்கள், வீடியோக்களையும் இவர்கள் டெலிட் செய்திருந்தனர். இன்ஸ்டாகிராமில் பேசிய விஷ்ணுகாந்த், 8 மாதங்கள் தாங்கள் காதலித்தபோது வராத பிரச்சினை திருமணமான சில தினங்களிலேயே வந்ததற்கு சம்யுக்தாவின் அப்பா தான் காரணம் என்றும் கூறியிருந்தார். உடனடியாக லைவில் வந்த சம்யுக்தா, திருமணத்திற்கு முன்பிருந்தே தங்களுக்குள் பிரச்சினை இருந்ததாகவும் திருமணத்தில் பிரச்சினை இருந்தால், தனக்கு தன்னுடைய அப்பாதானே சப்போர்ட் செய்வார் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
விஷ்ணுகாந்தின் ஆதரவாளர்கள் லைவில் பேசும்போதுகூட தவறாக கமெண்ட் செய்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். இவ்வாறு இவர்கள் இருவரும் மாற்றி மாற்றி குற்றம் சாட்டி தங்களின் காதலை கேள்விக்குட்படுத்தி வந்த நிலையில், இவர்களின் இத்தகைய நடவடிக்கை குறித்து பிரபல பாடகி ராஜலட்சுமி கேள்வி எழுப்பியுள்ளார். தங்களது சொந்த பிரச்சினையை தங்களுக்குள் பேசி தீர்த்துக் கொள்ளாமல் இதுபோல மீடியாவிற்கு கொண்டு வந்தது கேவலமாக இல்லையா என்று அவர் கேட்டுள்ளார்.
தங்களுக்குள் பேசி தீர்க்க வேண்டிய அந்தரங்க விஷயங்களை இவ்வாறு மீடியாவிற்கு கொண்டுவந்து சிறியவர் முதல் பெரியவர் வரை பார்க்கும் சமூக வலைதளங்களில் பேசி, தங்களை தாங்களே தவறாக காட்டியுள்ளதாகவும் ராஜலட்சுமி குறிபிபட்டுள்ளார். இவ்வாறு மற்றவர்கள் அருவருக்கும் வகையில் இவர்கள் நடந்து கொண்டதை காட்டிலும் பேசாமல் விவாகரத்து வாங்கிவிட்டு பிரிந்திருக்கலாம் என்றும் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பக்குவமில்லாமல் இவர்கள் தங்களது பிரச்சினைகளை பகிரங்கமாக பேசியுள்ளது இவர்களின் பலகீனமான மனதையே வெளிப்படுத்தியுள்ளது என்றும் சமூக வலைதளங்களில் தங்களது தரப்பு நியாயங்களை தெரிவிப்பதாக கூறி இவர்கள், தங்களை தரம் தாழ்த்திக் கொண்டுள்ளதாகவும் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார். சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான ராஜலட்சுமி தொடர்ந்து சமூக வலைதளங்களில் பல விஷயங்களை பேசி வருகிறார்.


Click it and Unblock the Notifications











