கணவனும் மனைவியும் சினிமாவுல ஹீரோ, ஹீரோயின் ஆனாங்க.. இப்போ கடனா.. பாடகி ராஜலட்சுமியின் பரிதாப நிலை!

சென்னை: விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட செந்தில் கணேஷ், ராஜலட்சுமி தம்பதியினர் அதிரடியாக சினிமாவில் பாட்டுப் பாட ஆரம்பித்து ஏகப்பட்ட ஹிட் பாடல்களை பாடி உள்ளனர்.

பிரபுதேவா, நிக்கி கல்ராணி நடித்த சார்லி சாப்ளின் 2 படத்தில் இடம்பெற்ற "சின்ன மச்சான்.. சொல்லு புள்ள" பாடலை பாடி ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து வேறலெவல் புகழ் அடைந்தார்.

சிவகார்த்திகேயன், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்களிலேயே செந்தில் கணேஷ் இன்னொரு பக்கம் பாடல்களை பாடி கெத்துக் காட்டினார்.

 Singer Rajalakshmi Senthil reveals about their debit struggles

விஜய் டிவி தந்த வாய்ப்பு: நாட்டுப்புற பாடகர்களான செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி தம்பதியினர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டு பாடல்களை பாடி தங்கள் திறமையால் கிடைத்த வாய்ப்பை பிடித்துக் கொண்டு கடகடவென முன்னேறினர்.

சின்ன மச்சான் பாடல் முதல் புஷ்பா படத்தின் சாமி சாமி பாடல் வரை பாடி புகழின் உச்சத்துக்கே சென்று விட்டார்.

சொந்தமாக வீடு: சென்னையிலேயே சொந்தமாக வீடு, கார் எல்லாம் வாங்கி ராஜலட்சுமி மற்றும் செந்தில் செட்டில் ஆகி விட்ட நிலையில், இருவரும் சினிமாவில் பாட்டு பாடுவதை தாண்டி நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

ஏற்கனவே செந்தில் கணேஷ் ஹீரோவாக கரிமுகன் எனும் படத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த படம் ஓடவே இல்லை.

 Singer Rajalakshmi Senthil reveals about their debit struggles

ஹீரோயினான ராஜலட்சுமி: இந்நிலையில், சமீபத்தில் அவரது மனைவி பாடகி ராஜலட்சுமி லைசன்ஸ் எனும் படத்தில் ஹீரோயினாகி உள்ளார். ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த பலரும் என்ன அறம் நயன்தாரா லுக்கில் அசத்துறீங்களே என பாராட்டித் தள்ளினர்.

கடன் இருக்கு: இந்நிலையில், சமீபத்தில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த பாடகி ராஜலட்சுமி சினிமாவில் நாங்கள் சாதித்து பல கோடி சொத்து வைத்திருப்பதாக பலரும் கருதுகின்றனர்.

வீடு, கார் எல்லாமே வாங்கியது இஎம்ஐல தான். நிறைய கடன் இருக்கு, அதுவும் கொரோனா காலத்துல ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், ரொம்பவே கடனில் கஷ்டப்படுகிறோம் எனக் கூறியுள்ளார்.

சொந்த ஊருக்கே செல்ல முடிவு: செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி இருவரும் இணைந்து இருளி எனும் படத்தில் நடித்து வருகின்றனர். லைசன்ஸ் படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், கடன் பற்றி தானும் தனது கணவரும் பேசும் போது, ஒரு வேளை பேங்க்காரங்க வந்து வீட்டை பிடிங்கிட்டு போயிட்டா என்ன பண்றது என்ற உடனே, அப்படியே சொந்த ஊரு பக்கமா போயிட வேண்டியது தான் என்று செந்தில் சொன்னதாக ராஜலட்சுமி தனது பேட்டியில் கூறியுள்ளார்.

அப்படியெல்லாம் எதுவும் நடக்காது, உங்கள் திறமைக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். இங்கேயே கடனை எல்லாம் அடைத்து விட்டு சூப்பரா இருப்பீங்க என ராஜலட்சுமிக்கு அவரது ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X